பறக்கும் விமானத்தில் நொறுங்கிய முகப்பு கண்ணாடி: சமயோசித முடிவெடுத்த விமானி

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானியாவின் கார்ன்வால் பகுதியில் இருந்து புறப்பட்ட விமானத்தின் முகப்பு கண்ணாடி நொறுங்கியதால் பாதி வழியில் விமானத்தை திருப்பி விட்டுள்ளார் விமானி.

பிரித்தானியாவின் கார்ன்வால் பகுதியில் இருந்து தலைநகர் லண்டனுக்கு புறப்பட்ட விமானத்திலேயே குறித்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

92 பயணிகளுடன் புறப்பட்ட Flybe விமானம் சம்பவத்தின்போது 12,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது.

அப்போதே விமானத்தின் முகப்பு கண்ணாடியில் பாரிய விரிசல் விழுந்துள்ளது. இதனையடுத்து உடனடியாக விமானத்தை புறப்பட்ட கார்ன்வால் பகுதிக்கே விமானி திருப்பி விட்டுள்ளார்.

குறித்த விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவரே விரிசல் விழுந்த கண்ணாடியின் புகைப்படத்தை எடுத்து வெளியிட்டவர்.

விமானத்தில் ஏற்பட்ட பிரச்னையை பயணிகள் தெரிந்து கொள்ளட்டும் என விமானி தனது அறையின் கதவை திறந்து விட்டுள்ளார்.

சம்பவம் குறித்து நினைவு கூர்ந்த பயணி ஒருவர், விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் திடீரென்று வேகம் குறைக்கப்பட்டது.

உடனையே விமானியிடம் இருந்து சம்பவம் தொடர்பாக அறிவிப்பும் வந்தது. இதனியடுத்து விமானம் கார்வாலுக்கே திருப்பி விடப்பட்டது என்றார்.

விமானம் தரையிறங்கியதும் பலர் சென்று கட்டணத்தை திரும்ப பெற்றுக் கொண்டனர். சிலர் அடுத்த விமானத்திற்காக காத்திருந்தனர் என்றார் இன்னொரு பயணி.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...