பிரித்தானியாவில் 8 குழந்தைகளை கொலை செய்த செவிலியர் வழக்கில் பொலிஸார் எடுத்த முடிவு!

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானியாவில் 8 குழந்தைகள் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட செவிலியருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவிலுள்ள Countess of Chester மருத்துவமனையில் கடந்த 2015 முதல் 2016க்கு இடைப்பட்ட காலத்தில் 17 குழந்தைகள் மர்மமான முறையில் உயிரிழந்தனர். அதேசமயம் 15 குழந்தைகள் படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டனர்.

இதுதொடர்பாக கடந்த ஆண்டு மே மாதம் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த காவல்துறையினர், கடந்த செவ்வாய்க்கிழமையன்று, Chester பகுதியை சேர்ந்த Lucy Letby (28) என்ற செவிலியரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இவர் 8 குழந்தைகளை கொலை செய்ததோடு, 6 குழந்தைகளை கொலை செய்ய முயற்சித்ததாகவும் சந்தேகம் எழுப்பப்பட்டது.

பிரித்தானிய முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்திய இச்சம்பத்தின் முதற்கட்ட விசாரணை முடிந்த நிலையில் செவிலியர் Lucy-க்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து காவல்துறையின் உயர் அதிகாரி ஒருவர் பேசுகையில், இந்த சம்பவம் பொதுமக்கள், மருத்துவ ஊழியர்கள் மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் பலருக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்குக்கும் என்பதை நாங்கள் அறிவோம். சிறப்பு பயிற்சி பெற்ற அதிகாரிகளால் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என தெரிவித்தார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்