இளவரசி கேட்டின் புது அவதாரம்: இப்படி இளவரசியைப் பார்த்து எவ்வளவு காலமாகிறது!

Report Print Balamanuvelan in பிரித்தானியா
468Shares
468Shares
ibctamil.com

பிரித்தானிய இளவரசி கேட்டின் சிரிப்பே ஒரு அழகு, அப்படியிருக்கும்போது சமீப காலமாக வரும் செய்திகளில் வாய் விட்டு சிரிக்கும் இளவரசியின் படங்கள் வருவது குறைந்து விட்டது.

அந்த குறையைத் தீர்க்கும் வகையில், குட்டி இளவரசர் லூயிஸ் பிறந்தபின் முதன் முதலாக இளவரசி கேட், மன நலம் தொடர்பான ஒரு மாநாட்டில் பங்கு கொண்டபோது, வாய் விட்டு சிரிக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

அதுமட்டுமின்றி கலை ஆர்வம் கொண்ட இளவரசி கேட், தனது ஓவியத் திறமையையும் பதிவு செய்துள்ளார்.

மாநாடு நடைபெறும் இடத்தில், அந்த மாநாடு தொடர்பான ஆளுயர ஓவியம் ஒன்றை வரைந்து கொண்டிருந்த பிரபல ஓவியர் ஒருவருக்கு இளவரசர் வில்லியமும் இளவரசி கேட்டும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.

அவர்களிடம் அந்த ஓவியர் பேசிக்கொண்டிருக்கும்போது திடீரென, இளவரசரும் இளவரசியும் தனது ஓவியத்தில் தங்கள் பங்களிப்பையும் செய்ய முடியுமா என்று கேட்க, இளவரசர் வில்லியம், கலை என்றாலே அது கேட்டின் ஏரியா என்று கூறி தப்பிக்க முயன்றார்.

கேட், நான் எங்கு வரைந்தால் அதை நீங்கள் பின்பு மறைக்க முடியும் என்று கேட்க, ஓவியர் ஓவியத்தின் தோள் பகுதியைக் காட்டினார்.

கேட் வெண்ணிறத்தில் ஒரு சிறிய பகுதியில் பெயிண்ட் செய்ய, படத்தையே கெடுத்துவிட்டாய் என்று மனைவியை கிண்டல் செய்தார் வில்லியம்.

ஓவியர், வில்லியமையும் விடவில்லை, ஒரு படத்தை கெடுக்கப்போகிறீர்கள் என்று கூறியவாறு அவரும் ஒரு சிறிய பகுதியில் பெயிண்ட் செய்ய மகிழ்ச்சியடைந்த ஓவியர், இளவரசரும் இளவரசியும் பெயிண்ட் செய்ததை தான் அப்படியே ஓவியத்தில் சேர்க்க இருப்பதாகத் தெரிவித்தார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்