பாஸ்போர்ட்டை கடித்து குதறிய நாய்: தேனிலவுக்கு சென்ற இளம் தம்பதிக்கு நேர்ந்த பரிதாபம்

Report Print Raju Raju in பிரித்தானியா

பாலி தீவுக்கு பிரித்தானியா தம்பதி தேனிலவு சென்ற நிலையில் கணவரின் பாஸ்போர்ட்டின் ஒரு பகுதி நாய் கடித்து கிழிந்ததால் அவர்கள் சொந்த ஊருக்கு திருப்பி அனுப்பட்டுள்ளனர்.

பிரித்தானியாவை சேர்ந்தவர் டேனியல். இவர் மனைவி தியா பார்த்திங். தம்பதிகள் இருவரும் தங்களது தேனிலவை கொண்டாட பாலி தீவுக்கு சென்றனர்.

பாலி தீவு விமான நிலையத்துக்கு அவர்கள் வந்தநிலையில் அதிகாரிகள் பாஸ்போர்ட்டை சோதனை செய்தனர்.

அப்போது டேனியல் பாஸ்போர்ட்டின் ஓரத்தில் கிழிந்திருந்ததை அதிகாரிகள் பார்த்தனர். இதையடுத்து அவரை உள்ளே அனுமதிக்க முடியாது என கூறி திருப்பி அனுப்பியுள்ளனர்.

இதையடுத்து சிங்கப்பூர் வழியாக பிரித்தானியா சென்று கொண்டிருந்த டேனியல் மற்றும் தியா சிங்கப்பூர் விமான அதிகாரிகளால் சோதனை செய்யப்பட்டனர்.

இதே பாஸ்போர்ட் பிரச்சனையால் டேனியல் கைது செய்யப்பட்டு 7 மணி நேர விசாரணைக்கு பின்னர் விடுவிக்கப்பட்டார்.

பின்னர் ஒருவழியாக இருவரும் பிரித்தானியா திரும்பினர். டேனியல் கூறுகையில், நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் தபாலில் எனது பாஸ்போர்ட் வந்தது.

அப்போது வீட்டில் இருந்த எங்கள் நாய் மிலோ, பாஸ்போர்டின் ஒரு பகுதியை குதறி மென்றுவிட்டது.

ஆனால் இந்த பாஸ்போர்டை வைத்து ஐரோப்பியாவுக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் சென்று வந்தேன்.

ஆனால் பாலி தீவில் எங்களை அதிகாரிகள் மோசமாக நடத்தினார்கள். அதே போல சிங்கப்பூரில் குற்றவாளிகளை போல எங்களை விசாரித்தார்கள், தேனிலவுக்கு சென்றதால் நாங்கள் அவதிப்பட்டதோடு, எங்களின் பணம் வீணானது தான் மிச்சம் என சோகத்துடன் கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்