இப்படி ஒரு உலகில் இளவரசர் ஹரியின் குழந்தை பிறப்பது அச்சமாக உள்ளது: தந்தை சார்லஸ்

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா

சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றி இளவரசர் சார்லஸ் நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய போது, தனது பேரக்குழந்தைகள் பற்றியும் இளவரசர் ஹரிக்கு பிறக்கப்போகும் குழந்தை குறித்தும் அச்சம் கொண்டுள்ளார்.

இந்த உலகத்தில் சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்பட்டு மிகவும் பாதிப்படைந்துள்ளது. முற்றிலும் மாசுபட்ட, சேதமடைந்த உலகத்திற்கு நாம் சென்றுகொண்டிருக்கிறோம்,

ஒவ்வொரு ஆண்டும் கடலில் நுழையும் பிளாஸ்டிக்கால் மோசமான நிலைக்கு தள்ளப்படுவதால், இந்த சூழ்நிலையை தொடர அனுமதிக்கக் கூடாது. சுற்றுச்சூழல் பாதுகாப்பை காப்பாற்ற நல்ல ஒரு தீர்வை எடுக்க வேண்டும்.

கடலில் உள்ள அனைத்து உயிரினங்களின் நீண்டகால சாத்தியக்கூறுகளை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இப்படி சுற்றுச்சூழல் பாதிப்படைந்து ஒசோன் மண்டலமும் பாதிப்படைகிறது.

ஏற்கனவே எனக்கு 3 பேரக்குழந்தைகள் உள்ள நிலையில், இப்படி ஒரு மாசுபட்ட உலகில் 4வது பேரக்குழந்தை பிறந்து, அக்குழந்தையும் இப்படி ஒரு சூழலை எதிர்கொள்வது அச்சமாக உள்ளது என கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்