இளவரசி டயானா எழுதிய உருக்கமான கடிதம் ஏலம்: என்ன தொகை தெரியுமா?

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானிய இளவரசி டயானா சாதாரண பெண் ஒருவருக்கு ஆறுதல் கூறும் வகையில் எழுதிய கடிதம் ஏலத்துக்கு வருகிறது.

மறைந்த டயானா எல்லா வித மக்களுடனும் பாகுபாடு இல்லாமல் பழகக்கூடியவராக திகழ்ந்தார்.

இந்நிலையில் எரிகா என்ற சாதாரண பெண்ணுக்கு டயானா கடந்த 1995ஆம் ஆண்டு நவம்பர் 29-ஆம் திகதி கடிதம் ஒன்றை எழுதி அனுப்பினார்.

அந்த கடிதமானது வரும் 16-ஆம் திகதி லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள Julien's Auctions என்னும் ஏல நிறுவனத்தில் ஏலத்தில் விடப்படுகிறது.

குறித்த கடிதமானது £4,000-க்கு ஏலத்தில் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எரிகா எழுதிய கடிதத்துக்கு டயானா பதில் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், டியர் எரிகா, உங்கள் கடிதம் எனக்கு கிடைத்தது, என்னால் முடிந்த வகையில் உங்களுக்கு ஆதரவு அளிக்க விரும்புகிறேன்.

உங்கள் மனதில் அதிக வலி உள்ளது கடிதம் மூலமே தெரிகிறது.

பல்வேறு விதமான வலிகள் மற்றும் காயங்களை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் நீங்கள் சந்திப்பதை என்னால் உணரமுடிகிறது.

நான் உங்களை பற்றி அதிகம் நினைக்கிறேன் என எழுதியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்