பிறந்தநாளில் மாயமான மகள்! செய்தியாளர்கள் முன் கண்ணீர் விட்டு அழுத பிரித்தானிய பில்லியனர்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

சுற்றுலா சென்ற இடத்தில் மாயமான தன்னுடைய மகளை பற்றி, பிரித்தானியாவை சேர்ந்த பில்லியனார் கண்ணீர் மல்க வேதனை தெரிவித்துள்ளார்.

எசெக்ஸ் பகுதியை சேர்ந்த கிரேஸ் மில்லேன்னே என்ற 22 வயது மாணவி, கால்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்ட 6 வார சுற்றுலா பயணமாக நியூசிலாந்திற்கு சென்றுள்ளார்.

2க்ரேஸின் பிறந்தநாளான 2ம் தேதியன்று வாழ்த்துக்கள் தெரிவிப்பதற்காக, அவருடைய அம்மா போன் செய்ய முயற்சி செய்துள்ளார்.

ஆனால் செல்போனை எடுக்காததால் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனடிப்படையில் வழக்கு பதிவு செய்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், 1ம் தேதி கிரேஸ் விடுதிக்கு திரும்பவில்லை என்பது தெரியவந்தது.

ஆக்லாந்து பகுதியில் உள்ள சிசிடிவியில் கிரேஸ் நடந்து செல்லும் காட்சி இடம்பெற்றிருந்தது. அதன்படி 1ம் தேதி முதல் கிரேஸ் மாயமாகியிருக்கிறார் என்பதை பொலிஸார் உறுதி செய்தனர்.

இதுகுறித்து பெற்றோர் பெரிதும் கவலை தெரிவித்தபோது, எந்த தவறும் நடந்ததற்கான அறிகுறிகள் தெரியவில்லை. 20 பேர் கொண்ட பொலிஸார் குழு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது என நியூசிலாந்து பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

ஆனால் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை சிறிது கவலையடைய வைத்ததால், மனைவியின் தந்தையும், பில்லியனாருமான் டேவிட் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார்.

அவர், என்னுடைய மகளுக்கு என்ன நடந்தது பற்றி உங்கள் அனைவருக்கும் தெரியும். இதுவரை எங்களை பிரிந்து இத்தனை நாட்களாக அவள் இருந்ததில்லை. முதன்முறையாக இப்படி நடந்திருப்பது பெரும் வேதனையை அளிக்கிறது. என்னுடைய குடும்பத்தார் அனைவரும் மிகுந்த சோகத்தில் உள்ளனர். யாரேனும் பார்த்தால் தகவல் கொடுக்குமாறு கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்