லண்டனில் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்ட இலங்கை தமிழர் விவகாரம்: ஒருவர் அதிரடி கைது

Report Print Raju Raju in பிரித்தானியா

லண்டனில் படுகொலை செய்யப்பட்ட இலங்கை தமிழர் வழக்கு தொடர்பாக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வடமேற்கு லண்டனில் உள்ள Pinner பகுதியில் இலங்கையில் பிறந்த ரவி என்பவர் உணவு கடை ஒன்றை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் கடந்த ஞாயிறு அன்று ரவி தனது கடையை திறந்த போது உள்ளே புகுந்த மர்ம நபர் அவரை கத்தியால் குத்தியுள்ளனர்.

கொள்ளையடிக்கும் நோக்கில் அவர் கடைக்குள் புகுந்துள்ளதாக தெரிகிறது.

ரவி உயிருக்கு போராடுவதை பார்த்த அவ்வழியே சென்ற நபர் இது குறித்து பொலிசுக்கு தகவல் கொடுத்தார்.

பின்னர் சம்பவ இடத்துக்கு ஆம்புலன்ஸ் வந்து ரவிக்கு சிகிச்சை அளித்த போதும் அவர் 45 நிமிடங்களில் உயிரிழந்தார்.

ரவியின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் மார்பு பகுதியில் கத்திக்குத்து ஏற்பட்டதால் உயிர் பிரிந்தது தெரியவந்தது.

ரவியை குத்திய நபர் அவரின் கடையிலிருந்து சில பவுண்டகள் மதிப்புடைய காயின்களுடன் தப்பித்ததாக தெரிகிறது.

இந்நிலையில் இந்த கொலை தொடர்பாக 44 வயதான நபரை பொலிசார் வடக்கு லண்டனில் கைது செய்துள்ளனர். அவர் பொலிஸ் காவலில் உள்ளார்

இது குறித்து பொலிஸ் அதிகாரி சைமன் கூறுகையில், இது அப்பாவி நபர் மீது நடத்தப்பட்ட தேவையற்ற தாக்குதல் என கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்