5 வருடங்களில் பலமுறை கருச்சிதைவு... மனம் நொந்த இளம்பெண்.. உருக வைக்கும் வீடியோ காட்சி

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானியாவை சேர்ந்த பெண் ஒருவர், தனக்கு கருச்சிதைவு ஏற்படும் சமயங்களில் எல்லாம், எடுத்துவைத்திருந்த வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

பிரித்தானியாவை சேர்ந்தவர்கள் ஆடம் ஃபேரிப்ரஸ் - ஹன்னா பெர்ரிமேன் (26) என்கிற தம்பதியினர். இவர்கள் 2014ம் ஆண்டு முதல் குழந்தை பெற்றுக்கொள்ளும் முயற்சியில் ஈடுப்பட ஆரம்பித்தனர்.

ஆனால் இரண்டு வருடங்களில் பலமுறை கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த தம்பதி, அந்த சமயத்தில் இருக்கும் தன்னுடைய மனநிலையை வீடியோவாக பதிவு செய்ய முடிவு செய்தனர்.

அதன்படி அடுத்து மூன்று ஆண்டுகளில் பலமுறை வீடியோக்களை பதிவு செய்ய ஆரம்பித்தனர். கடந்த ஆண்டு இறுதியில் மருத்துவமனை ஒன்றில் பரிசோதனை மேற்கொள்ளும் போது, ஹன்னாவிற்கு ஹார்மோன் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது.

இதனையடுத்து மருத்துவரின் அறிவுறுத்தலின் பேரில் செயற்கை கருத்தரித்தல் செய்யப்பட்டது. இதனை மகிழ்ச்சியுடன் இணையத்தில் பதிவிட்டுல ஹன்னா, அந்த வீடியோ காட்சிகளையும் இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

தற்போது அந்த வீடியோ காட்சிகள் வைரலாக பரவி வருகின்றன.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers