பிரித்தானிய மக்களுக்கு பிரெக்சிட் வேண்டும்: ஒரு சாதாரண குடிமகளின் குரல்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றின்போது பேசிய பிரித்தானிய குடிமகள் ஒருவர், மக்களுக்கு ’பிரெக்சிட் வேண்டும்’ என எழுப்பிய குரலுக்கு மக்கள் கையொலி எழுப்பி தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.

போரிஸ் ஜான்சன், அடுத்த பிரதமருக்கான போட்டியில், முதல் வாக்கெடுப்பில், 114 வாக்குகளுடன் முன்னணியில் நிற்கும் நிலையில், இது குறித்த தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றின்போது பேசிய குடிமகள் ஒருவர், மக்களுக்கு என்ன வேண்டுமோ அதை செய்வதற்காக நிற்பவர் என போரிஸ் ஜான்சனை புகழ்ந்தார்.

போரிஸ் ஜான்சன் கட்சித் தலைவரானால், அவர் நாடாளுமன்றத்தை முடக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

இந்த நாட்டின் மக்களுக்கு பிரெக்சிட் வேண்டும் என்றே நான் எண்ணுகிறேன் என்றார் அவர்.

இதுவரை யாரும் மக்கள் என்ன விரும்புகிறார்கள் என்பதை அறிந்து அதற்காக நிற்கவில்லை என்று அவர் கூறினார்.

மக்களின் மனதில் இருப்பதை பிரதிபலித்த அவரது பேச்சை ஆமோதித்த மற்ற பார்வையாளர்கள், கரவொலி எழுப்பி அவரது கூற்றை வரவேற்றார்கள்.

லேபர் கட்சியினர் இதுவரை பிரெக்சிட்டுக்கு தடையாகவேதான் இருந்துள்ளார்கள் என்று கரவொலிக்கு மத்தியில் தெரிவித்தார் அவர்.

இன்னொரு பார்வையாளர், நமது நாடு இப்போது சர்வ குழப்பத்தில் உள்ளது, இப்போதைக்கு நம்முடைய தேவை என்னவென்றால், இந்த நாட்டை இணைக்கும் ஒருவர்தான் என்றார்.

1930களுக்குப்பின் நாம் இப்படிப்பட்ட ஒரு குழப்பமான நிலையில் இருந்ததில்லை என்று கூறிய அவர், நாடாளுமன்றத்தைப் பொருத்தவரையில் இதை சரி செய்ய குறைவானவர்களே உள்ளனர் என்று நான் கருதுகிறேன் என்றார்.

தேர்ந்தெடுக்கப்படும் நபர், நம் நாட்டை ஆறு மாதங்களுக்காவது ஒன்றிணைத்தால் கூட, அதுவே எனக்கு போதுமானது என்றார் அவர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்