சொகுசு வாழ்க்கையை துறந்து துபாய் இளவரசி லண்டனுக்கு ஓட்டம் பிடிக்க காரணம் என்ன? அதிரவைக்கும் தகவல்

Report Print Raju Raju in பிரித்தானியா

துபாயில் தனது கணவரை பிரிந்து லண்டனுக்கு ஓட்டம் பிடித்த இளவரசி கயா பின்ட் அல்-ஹூசைன் சொகுசு வாழ்க்கையை துறந்து தப்பியோடியது ஏன் என்பது குறித்து அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

துபாயை ஆளும் ஷேக் முகமது அல் மேக்டூமின் மனைவியான இளவரசி கயா பின்ட் அல்-ஹூசைன், லண்டனில் தலைமறைவாக வாழ்ந்து வருவதாகவும், தனது கணவரை விட்டு பிரிந்து சென்ற பின்னர் உயிருக்கு பயந்து வாழ்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது

இதனிடையில் ஷேக் முகமது, பெயர் குறிப்பிடாத பெண்ணொருவர் தேச துரோசம் இழைத்து விட்டதாகவும், காட்டிக் கொடுத்துவிட்டதாகவும் குற்றஞ்சாட்டி கோபத்துடன் இன்ஸ்டாகிராமில் கவிதை ஒன்றை பதிவிட்டுள்ளார்.

ஜோர்டானில் பிறந்து, பிரித்தானியாவில் கல்வி பயின்ற இளவரசி கயா, ஷேக் முகமதை 2004ம் ஆண்டு திருமணம் செய்து, அவரது ஆறாவது மனைவியாக மாறினார்.

லண்டனுக்கு தப்பிய கயா மத்திய பகுதியிலுள்ள கென்சிங்டன் பேலஸ் கார்டன்ஸிலுள்ள நகர வீட்டில் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.

அவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, சட்ட போராட்டத்திற்கு தயாராகி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சரி, துபாயிலுள்ள ஆடம்பரமான வாழ்க்கையை விட்டு இளவரசி கயா லண்டனுக்கு செல்ல அவரை தூண்டியது என்ன?

துபாயை ஆளுகின்ற ஒருவருடைய மகள்களில் ஷேய்கா லத்தீஃபா என்ற பெயருடையவர், கடந்த ஆண்டு மர்மமான முறையில் துபாய் திரும்பி வந்தது தொடர்பாக கவலை அளிக்கக்கூடிய உண்மைகளை இளவரசி கயா சமீபத்தில் கண்டறிந்துள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பிரான்ஸை சேர்ந்த ஒருவரின் உதவியோடு கடல் வழியாக ஐக்கிய அரபு எமிரேட்டை விட்டு தப்பி சென்ற ஷேய்கா லத்தீஃபாவை, இந்திய கடலோர காவல் படை தடுத்து மீண்டும் துபாய்க்கு அனுப்பி வைத்தது.

அப்போது அயர்லாந்து அதிபர் மேரி ராபின்சனோடு சேர்ந்து இளவரசி கயாவும் இந்த சம்பவம் தொடர்பாக துபாய்க்கு ஆதரவாக பேசினார்.

இந்த விடயத்தில் ஷேய்கா லத்தீஃபா கடத்தப்பட்டு துபாய்க்கு திருப்பி அனுப்பப்பட்டார் என்று மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

அப்போது முதல் இந்த சம்பவம் தொடர்பாக இளவரசி கயா புதிய உண்மைகளை அறிய வந்துள்ளதாக கூறப்பட்டது.

இதன் விளைவாக, கணவரின் குடும்பத்தினரிடம் இருந்து வெறுப்புணர்வையும், அழுத்தங்களையும் எதிர்கொண்ட இளவரசி கயா, அங்கு தான் பாதுகாப்பாக இல்லை என்பதை உணர்ந்தார்.

இதன் பின்னரே அவர் லண்டனுக்கு சென்றுள்ளார்.

இந்த விவகாரம் இரு தனிப்பட்ட நபர்களுக்கு இடையிலானது என்று கூறி, லண்டனிலுள்ள ஐக்கிய அரபு எமிரேட்டின் தூதரகம் இது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...