ஆசிரியையை கொல்ல திட்டமிட்ட தாய்: எதற்காக தெரியுமா?

Report Print Balamanuvelan in பிரித்தானியா

தனது ஐந்து வயது மகன் தன்னைவிட அதிகம் தனது ஆசிரியையைக் குறித்து பேசியதால் பொறாமையடைந்த ஒரு பெண், அந்த ஆசிரியையைக் கொல்ல திட்டமிட்டார்.

மான்செஸ்டரைச் சேர்ந்த Nushee Imran (40) சிறப்புத் தேவைகள் கொண்ட தனது மகனிடம் அதிக அக்கறை காட்டிய Rebecca Kind என்னும் ஆசிரியை மீது பொறாமை கொண்டார்.

அதனால் கிட்டத்தட்ட ஓராண்டாக Nushee அவரை தொந்தரவு செய்துள்ளார். Rebeccaவுக்கு தொடர்ந்து போன் செய்து மிரட்டுவது, குறுஞ்செய்திகள், இமெயில்கள் அனுப்பிக் கொண்டே இருப்பது, அவரது வீட்டு முன் நின்று சத்தம் போடுவது என தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார் Nushee.

ஒரு நாள் நேருக்கு நேர் Rebeccaவை சந்தித்த Nushee, என்னைக் கண்டு உனக்கு பயமா என கேட்க, நான் ஒரு ஆசிரியராக எனது வேலையைச் செய்கிறேன் அவ்வளவுதான் என்று கூறியிருக்கிறார் Rebecca.

ஒருமுறை மருத்துவர் ஒருவரை சந்தித்த Nushee, தான் Rebeccaவை கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தனக்கு பயங்கர மன அழுத்தத்தை Rebecca ஏற்படுத்துவதாகவும், தனது பிள்ளைகளை தன்னை விட்டு பிரிக்க முயற்சிப்பதாகவும் தெரிவித்துள்ளார் Nushee. அதிர்ந்துபோன மருத்துவர் பொலிசாருக்கு தகவலளித்திருக்கிறார்.

பொலிசார் Nusheeயை விசாரிக்கும்போது, தனது மன அழுத்தம் காரணமாகத்தான் தான் அவ்வாறு நடந்து கொண்டதாக விளக்கமளித்துள்ளார் விவரமறிந்த Rebecca தன்னைக் கொலை செய்ய ஒரு மாணவனின் தாய் திட்டமிட்டது தன்னை அதிர்ச்சியடையச் செய்வதாக பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்தில் தான் Rebeccaவை ஓராண்டாக மிரட்டி தொல்லை கொடுத்து வந்ததை Nushee ஒப்புக்கொண்டார்.

Nusheeக்கு நீதிமன்றம் ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதித்துள்ளது, என்றாலும், அதை இப்போதைக்கு அனுபவிக்கத்தேவையில்லை என்று கூறியுள்ள நீதிமன்றம் ஐந்து ஆண்டுகளுக்கு Rebeccaவை சந்திக்கக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்