பிரிட்டீஸ் ஏர்வேஸ் விமானிகள் வேலை நிறுத்தத்தால் முடங்கிய விமான சேவை! இதனால் எவ்வளவு நஷ்டம் தெரியுமா?

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரிட்டீஷ் ஏர்வேஸ் விமான நிறுவன விமானிகள் வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளதன் காரணமாக விமான நிறுவனத்துக்கு பல கோடிகள் நஷ்டம் ஏற்படும் என தெரியவந்துள்ளது.

உலகின் முன்னணி விமான நிறுவனமான பிரிட்டிஷ் ஏர்வேஸ, நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான பயணிகளுக்கு விமான சேவை அளித்து வருகிறது.

ஆனால் விமானங்களை இயக்கி செல்லும் விமானிகளுக்கு முறையாக ஊதியம் வழங்கப்படவில்லை எனவும், ஊதியம் பிடித்தம் செய்யப்படுவதாகவும் விமானிகள் தரப்பில் புகார் கூறப்பட்டது.

இதுகுறித்து நிறுவனத்துக்கு தெரிவித்தும், நிறுவனம் செவி சாய்க்காததால் செப்டம்பர் 9 ,10 திகதிகளில் விமானிகள் போராட்டம் நடத்துகின்றனர்.

மேலும் 27ஆம் திகதி இன்னொரு வேலை நிறுத்த போராட்டத்துக்கு திட்டமிடப்பட்டுள்ளது

அதன்படி, பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானிகள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். நாளையும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.

இந்த போராட்டத்தில் 4000 விமானிகள் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

வேலை நிறுத்த போராட்டத்தால், பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தின் பெரும்பாலான விமான சேவைகள் முடங்கியுள்ளதாக ராய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தநிலையில், விமானிகளின் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம், இது விமானிகளின் பொறுப்பற்ற நடவடிக்கை என தெரிவித்துள்ளது.

மேலும் இந்த வேலை நிறுத்த போராட்டத்தால், பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு 147 மில்லியன் டொலர்கள் இழப்பு ஏற்படும் என கூறப்படுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்