மனைவியுடன் சேர்த்து துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட பிரித்தானியர்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

ஒரு பிரித்தானிய மனிதரும் அவரது பிலிப்பைன்ஸ் மனைவியும் தங்கள் சொந்த கடற்கரை ரிசார்ட்டிலிருந்து துப்பாக்கி ஏந்திய மர்ம கும்பலால் கடத்தப்பட்டுள்ளனர்.

பிலிப்பைன்ஸ் நாட்டின் ஜம்போங்கா டெல் சுர் மாகாணத்தில் துக்குரான் நகரில் உள்ள தங்களுடைய சொந்த ரிசார்ட்டில், ஆலன் ஹைரன்ஸ் (70) - வெல்மா பக்லினவன்-ஹைரான்ஸ் தம்பதியினர் தங்கியிருந்துள்ளனர்.

வெள்ளிக்கிழமையன்று உள்ளூர் நேரப்படி மாலை 6.50 மணியளவில் அங்கு கைதுப்பாக்கிகளுடன் வந்த மர்ம நபர்கள் நான்கு பேர், இரண்டு மோட்டார் படகுகளில் அவர்களை வெவ்வேறு திசைகளில் கடத்தி சென்றுள்ளனர்.

ஒரு படகு கரையோரத்தில் மேற்கு நோக்கி பகாடியன் நகரத்திற்குச் சென்றதாகக் கூறப்படுகிறது, மற்றொன்று திறந்த கடல் வழியே சென்றதாக தெரியவந்துள்ளது.

இதனை அக்கம்பக்கத்திலிருந்த இளைஞர்கள் சிலர் நேரில் பார்தததாகவும், துப்பாக்கிகளுடன் 6 பேர் வந்ததாகவும் கூறியுள்ளனர்.

துப்பாக்கி ஏந்தியவர்களில் குறைந்தது இருவராவது முந்தைய நாள் ஹோட்டலுக்கு பதிவு செய்துள்ளதாக உள்ளூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதில் ஈடுபட்ட கடத்தல்காரர்கள் பற்றிய தகவல்கள் கொடுப்பவர்களுக்கு 15,688 பவுண்டுகள் பரிசாக வழங்கப்படும் என மாகாண பொலிஸார் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்