பிரித்தானியாவில் இருந்து நாடு கடத்தப்படும் 2 வயது குழந்தை..! பாசப்போராட்டம் நடத்தும் தாய்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானியாவில் இருந்து இரண்டு வயது சிறுமி நாடகடத்தப்பட அவகாசம் கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில், அவரது தாய் பேசப்போராட்டம் நடத்தி வருகிறார்.

உள்நாட்டு அலுவலகம் நாட்டை விட்டு வெளியேற 14 நாட்கள் அவகாசம் அளித்ததை அடுத்து, லிண்ட்சே டட்டன் என்கிற தாய் தனது இரண்டு வயது மகள் லூசியை இங்கிலாந்தில் தங்க வைக்க போராடி வருகிறார்.

30 வயதான லிண்ட்சே டட்டன் தென் ஆப்பிரிக்காவில் பிறந்தவர். இவர் 2018ம் ஆண்டு பிரித்தானியாவில் குடியேறினார். இவருடைய 34 வயதான கணவர் கவின் பர்ல்ஸ் லீசெஸ்டர்ஷையரில் தனியாக வசித்து வருகிறார்.

இவர்கள் இருவருமே பிரித்தானியாவில் பிறக்கவில்லை என்றாலும் கூட, தங்கள் பெற்றோர் மூலம் பிரித்தானிய குடியுரிமையைப் பெற்றனர்.

ஆனால் அவர்களுடைய 2 வயது மகள் லூசி தென் ஆப்பிரிக்காவில் பிறந்ததால், அவருடைய பெற்றோர் அல்லது தாத்தா பாட்டி மூலம் குடியுரிமை கோர முடியாது என பிரித்தானிய குடிவரவு அலுவலகம் கூறியுள்ளது.

பிப்ரவரியில் லூசியின் குழந்தை பார்வையாளர் விசா காலாவதியானதை அடுத்து, அவரது அம்மா விசா நீட்டிப்பிற்கு விண்ணப்பித்தார். ஆனால் லூசி ஏழு ஆண்டுகளாக பிரித்தானியாவில் தொடர்ந்து வசிக்கவில்லை எனக்கூறி உள்துறை அலுவலகம் விண்ணப்பத்தை நிராகரித்துள்ளது.

இதனை எதிர்த்து லிண்ட்சே மேல்முறையீடு செய்யவில்லை என்றால் 14 நாட்களுக்குள் குழந்தை நாடகடத்தப்படும். இதனால் மனவேதனையடைந்துள்ள அவருடைய தாய் மேல்முறையீடு செய்ய 3,000 பவுண்டுகள் தேவைப்படுவதாக ஆன்லைனில் உதவி கோரியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்