தமிழ் திரைப்பட பிரபலம் மாரடைப்பால் மரணம்! லண்டனில் இருந்து கண்ணீருடன் வெளியிடப்பட்ட வீடியோ

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரபல திரைப்பட இயக்குனர் அருண்மொழி சென்னையில் மாரடைப்பால் உயிரிழந்த நிலையில் லண்டனில் இருந்து இயக்குனர் மிஷ்கின் கண்ணீர் மல்க அவருக்கு அஞ்சலி செலுத்தி வீடியோ வெளியிட்டுள்ளார்.

1986இல் காணிநிலம் திரைப்படத்தை இயக்கிய அருண்மொழி (49) பின்னர் ஏர்முனை திரைப்படத்தை 1989ஆம் ஆண்டு நடிகர் நாசரை வைத்து இயக்கினார்.

இவர் பல்வேறு ஆவணப்படங்கள் மற்றும் குறும்படங்களை இயக்கியுள்ளார்.

இயக்குனராக மட்டுமின்றி சமூக ஆர்வலராகவும் இருந்த அருண்மொழி நேற்றிரவு சென்னையில் மாரடைப்பால் காலமானார்.

திருவான்மயூரில் வைக்கப்பட்ட அவர் உடலுக்கு திரையுலகினர் பலர் கண்ணீர் மல்க நேரில் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில் அருண்மொழியின் நெருங்கிய நண்பரான அஞ்சாதே, துப்பாறிவாளன் திரைப்பட இயக்குனர் மிஷ்கின் அவருக்கு அஞ்சலி செலுத்தி கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தற்போது துப்பறிவாளன் 2 திரைப்பட படப்பிடிப்புக்காக லண்டனில் உள்ள மிஷ்கின் அங்கிருந்தே வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அதில், இரண்டு வாரங்களுக்கு ஒரு முறையாவது அருண்மொழியுடன் போனில் பேசி விடுவேன்.

இந்நிலையில் என் தம்பி காலையில் போன் செய்து நம் அருண்மொழி இறந்துவிட்டார் என கூறினான். அதை கேட்ட ஒரு நிமிடம் என் நினைவுகள் அனைத்தும் நின்றுவிட்டது.

நான் படப்பிடிப்பு முடிந்து விரைவில் ஊருக்கு வந்துவிடுவேன், அப்போது என் வீட்டுக்கு நட்சத்திரம் போல திரும்பி வாருங்கள் என சோகத்துடன் கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்