லண்டன் தாக்குதல்தாரியின் பூர்வீகம் வெளியானது.... நிதி பெற்றதும் அம்பலம்: வெளிவரும் அதிர்ச்சி தகவல்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானிய தலைநகர் லண்டனில் கத்தியால் தாக்குதல் முன்னெடுத்தவர் பாகிஸ்தான் தீவிரவாத முகாமிடமிருந்து நிதியுதவி பெற்று வந்தவர் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

லண்டன் பாலத்தில் சென்று கொண்டிருந்த பொதுமக்கள் மீது மர்ம நபர் ஒருவர் திடீரென கத்தியால் குத்தி தாக்குதல் முன்னெடுத்ததில் இருவர் மரணமடைந்துள்ளனர்.

மர்ம நபர் கத்தியால் தாக்கியதில் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இதையடுத்து அங்கு விரைந்து சென்ற பொலிசார் தாக்குதல் நடத்திய மர்ம நபரை பாலத்தின் அருகே துப்பாக்கியால் சுட்டு மடக்கிப் பிடித்தனர்.

இதில் அவர் கொல்லப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பில் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தாக்குதல் நடத்தியவர் பெயர் உஸ்மான் கான் (28) என்றும், அவர் தனது இளமை காலத்தை பாகிஸ்தானில் செலவழித்திருக்கிறார் பின்னர் லண்டன் வந்திருக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

(Image: Metropolitan Police/PA)

மேலும் கடும்போக்கான கருத்துக்களால் பிரித்தானியாவில் பிரபலமான இஸ்லாமிய மதபோதகர் அஞ்செம் சவுத்ரிக்கு நெருக்கமானவர் இந்த உஸ்மான் கான் என கூறப்படுகிறது.

மட்டுமின்றி, தீவிரவாத கருத்துகளை இணையத்தில் பரப்புவதற்காக பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகளிடமிருந்து நிதி பெற்று வந்திருக்கிறார் உஸ்மான் என்றும்,

அவர் அல்கய்தா தீவிரவாத கொள்கை இயக்கத்தால் ஈர்க்கப்பட்டிருந்தார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

(Image: PA)

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்