'பரிசுத்த குளியல்' எனக்கூறி பல குழந்தைகளிடம் சில்மிஷம் செய்த கிறிஸ்தவ மத போதகர்!

Report Print Vijay Amburore in பிரித்தானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக தனது சபையில் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு எதிரான பல பாலியல் பலாத்காரங்களில் ஈடுபட்ட கிறிஸ்தவ மத போதகர், குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளது.

மைக்கேல் ஒலூரோன்பி என்கிற 60 வயதான சுவிசேஷ போதகர், நைஜீரியாவில் பணியாற்றிய போது தனது மனைவியின் உதவியுடன், தனது சபையை சேர்ந்த குழந்தைகள் மற்றும் பெரியவர்களை பாலியல் வன்புணர்வு செய்ததாக குற்றசாட்டு எழுந்தது.

இளம்பெண் ஒருவர் தன்னுடைய சிறுவயதில் பாதிக்கப்பட்டதாக புகார் கூறியபின்னரே இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

அதன்படி மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், 1980 களில் துவங்கி 20 ஆண்டுகளாக அதிகமான சிறுமிகள் மற்றும் பெறுவர்களிடம் அவர் அத்துமீறியிருப்பது உறுதி செய்யப்பட்டது.

தூய்மைப்படுத்துவதற்கும், தீய தாக்கங்களிலிருந்து காப்பாற்றுமாறு தனக்கு கடவுள் கூறியதாக சபையில் இறந்தவர்களை நம்ப வைத்த அவர், 'பரிசுத்த குளியல்' என்கிற பேரில் அத்துமீறி நடந்துள்ளார்.

மேலும் இதில் பாதிக்கப்பட்ட பல சிறுமிகளை மருத்துவமனைக்கு அழைத்து சென்று கருக்கலைப்பும் செய்துள்ளார்.

ஒலுரோன்பி கடந்த ஆண்டு மே மாதம், தனது சடங்கு பொருட்கள் மற்றும் ஒரு தொகை பணத்தை கொண்டு நாட்டை விட்டு வெளியேற முயன்றபோது பர்மிங்காம் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் அவர் மீது 15 பாலியல் பலாத்காரம், ஏழு முறைகேடான தாக்குதல் மற்றும் இரண்டு பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

60 வயதான அவரது மனைவி ஜூலியானா, பாலியல் பலாத்காரத்திற்கு உதவியது உள்ளிட்ட மூன்று குற்றச்சாட்டுகளுக்கு தண்டனை பெற்றார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்