பாலியல் குற்றவாளியை நிர்வாணமாக்கி கழிப்பறைக்குள் தலையை விட வைத்த கைதிகள்! சர்ச்சையை கிளப்பிய வீடியோ

Report Print Basu in பிரித்தானியா
492Shares

பிரித்தானியா சிறையில் அடைக்கப்பட்ட பாலியல் குற்றவாளியை, உடனிருந்த கைதிகள் அரை நிர்வாணமாக்கி கழிப்பறைக்குள் தலையை விட வைத்த சம்பவம் வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வடக்கு லண்டனில் உள்ள எச்எம்பி பெண்டன்வில்லி சிறையிலே இச்சம்பவம் நடந்துள்ளது.

குறித்த வீடியோவில், நபர் ஒருவரை சிறை கழிப்பறைக்குள் வலுக்கட்டாயமாக அழைத்து செல்லும் உடனிருந்த கைதிகள். உடைகளை களையும் படி வற்புறுத்திகின்றனர்.

டி-சர்ட்டை கழட்டியதை அடுத்து கழிப்பறைக்குள் தலையை விட வைக்கின்றனர். அந்த நபர் தன்னை விட்டு விடும் படி அவர்களிடம் கெஞ்சுகிறார்.

இச்சம்பவத்தை கைதி ஒருவர் போனில் வீடியோவாக பதிவுசெய்துள்ளார். தற்போது, குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிறைக்குள் செல்போனுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கைதிகள் துன்புறுத்திய நபர் 16 வயது சிறுமியை கடத்தில் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சமீபத்தில் தான் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர் என தெரியவந்துள்ளது.

சம்பவம் குறித்து சிறை அதிகாரி, சம்மந்தப்பட்ட துறை தரப்பிலிருந்து தற்போது வரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்