பிரித்தானிய குட்டி இளவரசர் லூயிஸ் தூங்கும் அறையில் நடமாடும் ஆவி!

Report Print Balamanuvelan in பிரித்தானியா
578Shares

பிரித்தானிய இளவரசர் வில்லியமுடைய மூன்றாவது மகனான குட்டி இளவரசர் லூயிஸ் தூங்கும் அறையில், ஒரு ஜேர்மானிய சிறுவனின் ஆவி உலவுவதாக நம்பப்படுகிறது.

இளவரசர் வில்லியமும் இளவரசி கேட்டும் தங்கள் மூன்று பிள்ளைகளுடன் வாழும் இடம்தான் அரண்மனையிலேயே அதிக ஆவிகள் உலாவும் இடமாம்.

அங்கு பல ஆவிகள் நடமாடுவதை அங்கு பணியாற்றும் பெண்கள் பலரும் பார்த்துள்ளதாக கூறும் நிலையில், ஒரு குட்டிப்பையனின் ஆவி அங்கு உலவுவதைக் குறித்த ஒரு கதை கூறப்படுகிறது.

1725ஆம் ஆண்டு, ஜேர்மன் வனப்பகுதியில் ஒரு குட்டிப்பையன், தனியாக, நிர்வாணமாக கிடந்தானாம்.

Image: Getty Images/iStockphoto

அவனை கென்சிங்க்டன் மாளிகைக்கு கொண்டு வந்து, தன்னுடைய மனித செல்லப்பிராணியாக வளர்த்தாராம் மன்னர் முதலாம் ஜார்ஜ்.

அவனுக்கு, வனமகன் பீற்றர் என்று பெயர் சூட்டப்பட்டதாம். அவனுக்கு அரிய நோய் ஒன்று இருந்ததால், அவனது முகம் சற்று விகாரமாக காணப்படுமாம்.

பீற்றரால் பேச முடியாது, அத்துடன் நாகரீகம் கற்றுக்கொள்ளவும் மறுத்த பீற்றர், கட்டிலில் கூட படுக்காமல் தன் அறையில் ஒரு மூலையில் சுருண்டு படுத்துக்கொள்வானாம்.

dailystar

70 வயது வரை வாழ்ந்த பீற்றர், மன்னர் ஜார்ஜ் என்ற இரண்டு வர்த்தைகளைத்தவிர வேறு எதுவும் பேசியதில்லையாம்.

தனது மரணத்துக்குப்பின் பீற்றர், தற்போது குட்டி இளவரசர் லூயிஸ் உறங்கும் அறையில்தான் ஆவியாக தங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

Image: Getty Images

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்