பிரித்தானியாவில் என்ன நடக்கிறது? எத்தனை சதவீதம் பேர் கொரோனாவால் பாதிக்கப்படுவர்? கசிந்த ஆவணம்

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியாவில் 7.9 மில்லியன் மக்கள் கொரோனா வைரஸ் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்படலாம் என்ற பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக பிரித்தானியாவில் 1391 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 35 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருவதால், மக்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அரசாங்கத்தின் ஆவணம் ஒன்று கொரோனா வைரஸ் குறித்து கசிந்துள்ளதாக பிரபல ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

அதில், இங்கிலாந்தில் 80 சதவீதம் வரை கொரோனா வைரஸால் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த கொரோனா வைரஸின் பாதிப்பு ஒரு வருடம் வரை நீடிக்கும் என்று, ஆவணத்தின் படி பார்த்தால், 7.9 மில்லியன் மக்கள் வரை வைரஸ் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படலாம் என்று குறிப்பிட்டுள்ளது.

(Picture: Mercury/Reuters/Getty)

பொது சுகாதார இங்கிலாந்து மாநாட்டில், அடுத்த 12 மாதங்களில் 80 சதவீதம் மக்கள் கொரோனா நோயால் பாதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

15 சதவீதம் (7.9 மில்லியன் மக்கள்) வரை மருத்துவமனையில் அனுமதிக்கப்படலாம் என்று வரையப்பட்டுள்ளது. அவசரகால தயார்நிலை, மறுமொழி குழுவினர் மற்றும் இங்கிலாந்தில் தொற்றுநோயைப் பற்றி பணியாற்றும் முன்னணி அதிகாரியான டாக்டர் சூசன் ஹாப்கின்ஸால் அங்கீகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Picture: Getty)

ஒரு மூத்த NHS நபர் ஆய்வறிக்கையில் 80 சதவீதம் மக்கள் பாதிக்கப்பட்டிருந்தால், இறப்பு விகித 1 சதவீதமாக மாறி, அரை மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இறக்க கூடும் என்று தெரிவித்துள்ளார்.

தலைமை மருத்துவ அதிகாரி, பேராசிரியர் Chris Whitty, கணிப்பு சரியாக இருந்தால், அதன் விகிதம் 6.0 சதவீதத்துக்கும் இருந்தால், இது 318,660 பேர் இறப்பதற்கு வழிவகுக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்