உணவு இலவச டெலிவரி... கூடவே டாய்லெட் பேப்பர் இலவசம்: அடைந்து கிடக்கும் லண்டன் மக்களுக்கு உணவகத்தின் சேவை!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

கொரோனா அச்சத்தால் வீடுகளுக்குள் அடைந்து கிடக்கும் மக்களுக்கு உணவை இலவசமாக டெலிவரி செய்வதுடன், கூடவே இலவசமாக டாய்லெட் ரோல் ஒன்றையும் வழங்க முன்வந்துள்ளது லண்டன் உணவகம் ஒன்று.

தென் மேற்கு லண்டனிலுள்ள One One Four உணவகம்தான், மக்களை குஷிப்படுத்தும் இந்த செயலை செய்துள்ளது.

பிரித்தானியர்கள் கொரோனா அச்சத்தால் டாய்லெட் பேப்பர்களை வாங்கிக் குவித்ததால் பல்பொருள் அங்காடிகளில் டாய்லெட் பேப்பருக்கு பஞ்சம். இன்னொரு பக்கம் மக்கள் வீடுகளுக்குள் பதுங்கிவிட்டதால், உணவகங்களுக்கும் பார்களுக்கும் பலத்த அடி.

இந்நிலையில், உணவகங்களும் பார்களும் வீடுகளுக்கே பொருட்களை கொண்டு சென்று வழங்கும், அல்லது மக்கள் உணவுப் பொருட்களை வாங்கி வீடுகளுக்கு கொண்டு சென்று உண்ணும் வகையில் சட்டத்தில் உடனடி மாற்றங்கள் செய்துள்ளது அரசு.

இந்த சூழ்நிலையை பயன்படுத்திக்கொண்டு, பரஸ்பர உதவியாக, One One Four உணவகம், வீடுகளுக்கு உணவை இலவச டெலிவரி செய்வதுடன், கூடவே டாய்லெட் ரோல் ஒன்றையும் இலவசமாக வழங்கி வருகிறது.

டாய்லெட் ரோல் இல்லாமல் அவதிப்படும் மக்களுக்கும் மகிழ்ச்சி, வியாபாரம் ஆவதால் உணவகத்துக்கும் மகிழ்ச்சி!

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்