பிரித்தானியாவில் மீண்டும் கொரோனா பரவல்! ஊரடங்கு தளர்வுகள் குறித்து பிரதமர் போரிஸ் முக்கிய அறிவிப்பு

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியாவின் வடக்கு பகுதியில் கொரோனா பரவல் மீண்டும் துவங்கி இருப்பதால், ஊரடங்கு தளர்வுகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக பிரித்தானியாவில் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 46-ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

ஐரோப்பாவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் பிரித்தானியாவும் உள்ளது. சமீப நாட்களாக கொரோனா பாதிப்பு குறைவது போன்று தெரிந்தாலும், நாட்டின் ஒரு சில பகுதிகளில் நோயின் தீவிரம் அதிகமாகிக் கொண்டு தான் வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 880 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் இது குறித்து பிரதமர் போரிஸ் ஜோன்சன், மக்கள் அதிகம் கூடக் கூடிய வாய்ப்புள்ள கேசினோஸ், ஸ்கேட்டிங் போன்ற விஷயங்களுக்கு தடை நீட்டிக்கப்பட வேண்டும்.

(Image: PA)

ஊரடங்கு தளர்வு என்பது சூழ்நிலையைப் பொறுத்து தான் முடிவு செய்ய முடியும். தளர்வுகளுக்கு தடை போட தயங்கக் கூடாது.

பிரித்தானியாவில் கொரோனாவின் இரண்டாம்அலை வீசுகிறது. கொரொனா பாதிப்புகளை மீண்டும் கூட்ட பிரித்தானியா அனுமதிக்காது என்று கூறியுள்ளார்.

மேலும், நாட்டின் சுகாதார அமைச்சர் மாட் ஹான்காக்ம் ஊரடங்கு மீண்டும் கடுமையாக்க வேண்டும். ஏனென்றால் மக்கள் சமூக இடைவெளி கடைப்பிடிக்காமல் உள்ளனர்.

ஊரடங்கு நீட்டிப்பது மனதிற்கு கஷ்டமாக உள்ளது. ஆனால் ஐரோப்பிய மக்களின் நன்மைக்காக இதை செய்ய வேண்டியது உள்ளது. பிரித்தானியாவில் கொரோனா இரண்டாம் அலை வீசுவது புள்ளிவிவரங்களின் அடிப்படையில் உறுதியாவதாக கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்