ஒன்லைனில் உணவு ஆர்டர் செய்த பெண்: பார்சலை திறந்து பார்த்தபோது ஏற்பட்ட அருவருப்பு!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

லண்டனைச் சேர்ந்த பெண் ஒருவர், கொரோனா அச்சத்தால் வெளியே செல்ல பயந்துகொண்டு வீட்டிலிருந்தபடியே ஒன்லைனில் உணவு ஆர்டர் செய்துள்ளார்.

Michelle Leonard (42) என்ற அந்த மூன்று பிள்ளைகளின் தாய், Ocado உணவு சப்ளை நிறுவனத்தில் ஆர்டர் செய்த பார்சல் வந்ததும், ஆவலாக அதை திறந்து பார்த்திருக்கிறார்கள் அவரது பிள்ளைகள்.

அப்போது Michelleஇன் மகனான Alfie (19), உணவுப் பொட்டலங்களுடன் மூன்று கவர்களில் ஏதோ திரவம் இருப்பதைக் கவனித்து தன் தாயிடம் கூறியுள்ளார்.

Michelle அது என்ன என்று பார்க்க, அருவருப்பாகியுள்ளது அனைவருக்கும். ஆம், அந்த உணவுப்பொட்டங்களுக்கு நடுவில் மூன்று கவர்களில் இருந்தது சிறுநீர்! குமட்டிக்கொண்டுவர, அந்த உணவு முழுவதையும் குப்பையில் கொட்டியிருக்கிறது குடும்பம்.

Credit: David New - The Sun

ஆதாரத்துக்காக அந்த சிறுநீர் கவர்களை புகைப்படம் எடுத்து வைத்துக்கொண்டு, Ocado நிறுவனத்துக்கு தகவல் கொடுத்துள்ளார் Michelle.

உடனே அந்த நிறுவனத்தார், மன்னிப்புக் கேட்டுக்கொண்டு, தாங்கள் ஆள் அனுப்பி அந்த சிறுநீரை திரும்பப் பெற்றுக்கொள்வதாக கூறியிருக்கிறார்கள்.

எனக்கு அதெல்லாம் போதாது என்று கூறும் Michelle, இனி ஜென்மத்துக்கும் Ocado நிறுவனத்தில் உணவு ஆர்டர் செய்யமாட்டேன் என்கிறார்.

Credit: David New - The Sun

Credit: David New - The Sun

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்