பிரித்தானியாவில் வீட்டில் இறந்து கிடந்த இந்திய பெண்! உடல் முழுவதும் தூவப்பட்டிருந்த மிளகாய் பொடி... பணக்கார கணவன் அளித்த வாக்குமூலம்

Report Print Raju Raju in பிரித்தானியா
2624Shares

பிரித்தானியாவில் தனது இரண்டாவது மனைவியை கொலை செய்ததாக கணவன் மீது குற்றச்சாட்டு எழுந்த நிலையில் நீதிமன்றத்தில் அதை அவர் மறுத்துள்ளார்.

இந்தியாவை சேர்ந்தவர் குர்பீரித் சிங் (38). பிரித்தானியாவில் வசிக்கும் பணக்கார தொழிலதிபரான இவரின் இரண்டாவது மனைவி சர்பிரீத் கவுர் (38).

Wolverhampton நகரில் குர்பீரித் வசித்து வந்த நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16ஆம் திகதி அவர் மனைவி கவுர் வீட்டின் அறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

அவர் முகம் மற்றும் உடல் முழுவதும் மிளகாய் பொடி தூவப்பட்டிருந்தது. அவரை கொலை செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் குர்பீரித்தை பொலிசார் கைது செய்தனர்.

அவர் மீது நீதிமன்ற விசாரணை நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் நடந்த விசாரணையின் போது, சம்பவம் நடந்த சமயத்தில் பெண் ஒருவர் குர்பீரித் வீட்டுக்கு வந்துவிட்டு 50 நிமிடங்கள் கழித்து அங்கிருந்து கிளம்பி சென்ற காட்சி சிசிடிவி கமெராவில் பதிவானதாக தெரிவிக்கப்பட்டது.

இதனிடையில் கவுர் கொலை செய்யப்பட்ட அன்று குர்பீரித் கோவிலுக்கு சென்றிருக்கிறார்.

அப்போது அவர் கையில் கறைகள் எதாவது இருந்ததா என கோவில் குருக்களிடம் விசாரிக்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த குருக்கள், குர்பீரித் கைகள் சுத்தமாகவே இருந்ததாக கூறியுள்ளார்.

குர்பீரித் கூறுகையில், எங்கள் வீட்டில் உள்ள ஒரு அறையில் கவுர் சடலமாக கிடப்பதை பார்த்தேன், நான் அவரை கொலை செய்யவில்லை என திட்டவட்டமாக நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

தொடர்ந்து அவரிடம் அடுத்தக்கட்ட விசாரணை நடைபெறவுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்