இன்று முதல் பிரித்தானியாவுக்குள் நுழைவோருக்கு புதிய கட்டுப்பாடு அறிமுகம்: அவுஸ்திரேலியாவைப் பின்பற்றி நடவடிக்கை

Report Print Balamanuvelan in பிரித்தானியா
959Shares

பிரித்தானியாவுக்குள் நுழையும் அனைவரும் இனி தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளும் வகையில் புதிய திட்டம் ஒன்று செயல்படுத்தப்பட உள்ளது.

அதன்படி, பிரித்தானியாவுக்குள் வருவோர் தங்களை தனிமைப்படுத்திக்கொள்வதற்காக ஹொட்டல்களை ஏற்பாடு செய்யுமாறு அமைச்சர்கள் அதிகாரிகளை கேட்டுக்கொண்டுள்ளார்கள்.

இந்த திட்டத்தைதான் அவுஸ்திரேலியாவும் பின்பற்றுகிறது. இதனால் தடுப்பூசிகளுக்கு அடங்காத பல்வேறு வகை திடீர்மாற்றம் பெற்ற கொரோனா வைரஸ்கள் பிரித்தானியாவுக்குள் நுழைவது குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகம் முழுவதும் தென்னாப்பிரிக்க மற்றும் பிரேசில் வகை கொரோனா வைரஸ் பரவிவரும் நிலையில், அவை பிரித்தானியாவுக்குள் நுழையாமல் தவிர்க்கவே இந்த நடவடிக்கை.

தற்போது நடைமுறையிலிருக்கும், மக்கள் தாங்களாகவே தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும் என்னும் விதிமுறையை மாற்றி, மக்கள் தனிமைப்படுத்தல் காலகட்டம் முழுவதையும் ஒழுங்காக கடைப்பிடிப்பதை உறுதி செய்யும் வகையில் மேற்பார்வையிடுவது முதலான மாற்றங்கள் விதிமுறையில் செய்யப்பட உள்ளன.

அத்துடன், மக்கள் தனிமைப்படுத்துதலிலிருந்து வெளியே வரவில்லை என்பதை உறுதி செய்யும் வகையில், GPS மற்றும் முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பம் ஆகியவை அறிமுகப்படுத்தப்படவும் திட்டம் உள்ளதாக சண்டே டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்