பிரித்தானியாவில் விமானநிலையத்தில் 19 வயது இளைஞன் கொண்டு வந்த லக்கேஜை சோதனை செய்த போது, அதன் உள்ளே தடை செய்யப்பட்ட கையெறி குண்டு இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவின் ஹீத்ரோ விமானநிலையத்தில் இத்தாலியைச் சேர்ந்த 19 வயது இளைஞன் கையெறி குண்டு வைத்திருந்ததை ஒப்புக்கொண்ட காரணத்தினால், அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், கடந்த வெள்ளிக் கிழமை மாலை உள்ளூர் நேரப்படி 5.30 மணிக்கு டெர்மினல் 2 புறப்படும் பகுதியில் பயணிகளின் பொருட்கள் சோதனை செய்யப்பட்டது.
அப்போது 19 வயது மதிக்கத்தக்க இத்தாலியைச் சேர்ந்த Domenico Giovinazzo என்ற நபரின் லக்கேஜை சோதனை செய்த போது, அதன் உள்ளே விமானநிலையங்களில் ஆபத்தை விளைவிக்க கூடிய தடை செய்யப்பட்ட கையெறி குண்டு இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.
இதையடுத்து இது குறித்து உடனடியாக சிறப்பு அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட, விரைந்து வந்த அதிகாரிகள் அதை சோதனை செய்த போது, அது உண்மையான கையெறி குண்டு என்பதை உறுதி செய்யது, தடை செய்யப்பட்ட பொருட்களை கொண்டு செல்ல முயன்றதாக கூறி, இளைஞன் மீது குற்றம் சாட்டப்பட்டது.
அதன் பின் காவலில் வைக்கப்பட்டு கடந்த திங்கட் கிழமை Uxbridge Magistrates நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.
அப்போது, அவருக்கு இரண்டு மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
ஒரு நல்ல காரணத்திற்காக விமான நிலையங்களுக்குள் ஆபத்தை விளைவிக்கும் ஆயுதங்களை கொண்டு வருவது குறித்து கடுமையான விதிகள் இருப்பதாக Met’s Aviation பொலிஸ் கட்டளைக்கு தலைமை தாங்கும் தலைமை கண்காணிப்பாளர் சீன் வில்சன் எச்சரித்தார்.
அவர் தொடர்ந்து கூறுகையில், ஒரு கைக்குண்டு கொண்டு வருவது பொறுப்பற்றது மற்றும் ஆபத்தானது. இது விமான நிலையத்தில் இருக்கும் பிற பயணிகளுக்கும் பெரும் இடையூறு ஏற்படுத்தியது.
இது போன்ற தடைசெய்யப்பட்ட பொருட்களை அடையாளம் காண பல்வேறு பாதுகாப்பு சோதனைகள் உள்ளன, இந்த பொருள் கண்டுபிடிக்கப்பட்டபோது, விரைவாக பதிலளிக்க சிறப்பு அதிகாரிகள் எங்களிடம் இருந்தனர்.
அதிர்ஷ்டவசமாக அவர்களால் எந்த ஒரு அச்சுறுத்தல் அல்ல என்பதை அடையாளம் காண முடிந்தது, யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
தடைசெய்யப்பட்ட எந்தவொரு பொருளையும் விமான நிலையத்திற்குள் கொண்டு வரவில்லை என்பதை உறுதிப்படுத்த அனைத்து பயணிகளுக்கும் இது ஒரு நினைவூட்டலாகவும் எச்சரிக்கை செய்தி, அப்படி உங்களுக்குத் தெரியாவிட்டால், நீங்கள் பறக்கும் விமான நிலையம் மற்றும் விமான நிறுவனத்துடன் சரிபார்த்து கொள்ளவும் என்று தெரிவித்துள்ளார்.