இளவரசர் பிலிப்பை பார்க்க... லண்டன் மருத்துவமனைக்கு 100 மைல் தொலைவில் இருந்து வந்த சார்லஸ்! வெளியான வீடியோ

Report Print Santhan in பிரித்தானியா
0Shares

இளவரசர் பிலிப் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவரை பார்ப்பதற்காக மகனான இளவரசர் சார்லஸ் லண்டன் மருத்துவமனைக்கு வந்து சென்றுள்ளார்.

பிரித்தானியா(Duke of Edinburgh) இளவரசர் Philip(99) உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கடந்த செவ்வாய் கிழமை மாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக பக்கிங்ஹாம் அரண்மனை குறிப்பிட்டிருந்தது.

இவர், லண்டனில் உள்ள King Edward VII மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இளவரசர் Philip மருத்துவரின் ஆலோசனையின் பேரிலே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அரண்மனை வட்டாரம் கூறியிருந்தது.

இந்நிலையில், இளவரச் பிலிப்பின் மகனும், Wales இளவரசருமான சார்லஸ் நேற்று தந்தையை பார்ப்பதற்காக சுமார் 100 மைல் பயணம் செய்து, King Edward VII மருத்துவமனைக்கு வந்தார்.

72 வயதான சார்லஸ் நேற்று பிற்பகல் உள்ளூர் நேரப்படி 3.20 மணியளவில் சாம்பல் நிற டெஸ்லா காரில் முகக்கவசம் அணிந்த படி வந்தார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் இளவரசர் பிலிப்பை சந்தித்த ராஜ குடும்பத்தின் முதல் உறுப்பினர் இவர் ஆவார்.

சுமார் 30 நிமிடங்கள் மருத்துவமனையில் இருந்ததாக கூறப்படுகிறது. இவர் Gloucestershire-ன் Highgrove-வில் இருந்து சுமார் 100 மைல் பயணம் செய்து பிலிப்பை பார்க்க வந்துள்ளார்.

இளவரசர் பிலிப் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே மருத்துவமனையில் இருப்பதாகவும், ஆனால், அவர் ஏன் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என்பது குறித்தும் தெரியவில்லை,

மேலும், பிலிப் பல நாட்களாகவே உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளார். மருத்துவர்கள் அறிவுறுத்தலின் பேரிலும், முன்னெச்சரிக்கையாகவும்(கொரோனா காரணமாக) மருத்துவமனையில் உள்ளார்.

கடந்த 2011-ஆம் ஆண்டு கரோனரி தமனி சிகிச்சை போன்ற பல்வேறு சிகிச்சைகள் காரணமாக பல ஆண்டுகளாகவே பிலில் உடல்நலப் பிரச்சனைகளை சந்திது வருகிறார்.

2021-ஆம் ஆண்டு சிறுநீர்ப்பை தொற்றின் காரணமாக, குயின்ஸ் வைர விழா கொண்டாட்டங்களை தவறவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

அதன் பின், ஜூன் 2013-ல் அவருக்கு அடிவயிற்றில் அறுவை சிகிச்சை தேவைப்பட்டது, பின்னர் அவர் 2014 க்குள், தன்னுடைய 93 வயதில் செவிப்புலன் கருவிகளைப் பயன்படுத்தத் தொடங்கினார்.

இதைத் தொடர்ந்து ஜூன் 2016-ல் நடந்த ஜட்லாண்ட் ஆண்டுவிழா நிகழ்வில் இருந்து ஒரு சிறிய வியாதியைக் காரணமாக பங்கேற்க முடியாமல் போனது.

இப்படி தொடர்ந்து உடல்நலப் பிரச்சனை சந்தித்து வந்த நிலையில், கடந்த 2017-ஆம் ஆண்டில் பொதுக் கடமையில் இருந்து பிலிப் ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்