பிரித்தானியாவில் பெரியவர்கள் அனைவருக்கும் ஜுலை 31-ஆம் திகதிக்குள் கொரோனா தடுப்பூசி செலுத்தும் வகையில் திட்டம் விரிவுபடுத்தவிருக்கிறது.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக, பிரித்தானியாவில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக வயதானவர்கள், கொரோனாவால் பாதிக்கப்படகூடியவர்கள் மற்றும் மருத்து பணியாளர்கள், சுகாதார ஊழியர்கள் போன்றோருக்கு போட்டப்பட்டது.
இந்நிலையில், தற்போது பிரித்தானியாவில் பெரியவர்கள் அனைவருக்கும், வரும் ஜூலை 31-ஆம் திகதிக்குள் கொரோனா தடுப்பூசி செலுத்தும் வகையில் திட்டத்தை விரிவுபடுத்தவிருக்கிறது.
ஏப்ரல் 15-ஆம் திகதிக்குள் 50 வயதுக்கும் மேற்பட்டவா்கள் மட்டும் கொரோனா மரண அபாயத்தை ஏற்படுத்தும் உடல் நலக்குறைவுடையவா்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த புதிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னா் இந்த இலக்கு மே 1-ஆம் திகதியாக இருந்தது.
மேலும், பிரித்தானியாவில் பைஸா், அஸ்ட்ராஸெனெகா ஆகிய நிறுவனங்களின் தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன.
ஆனால், ஐரோப்பிய நாடுகளுக்கு அதே தடுப்பூசிகளை அனுப்புவதில் பற்றாக்குறை நிலவுவதாக அந்த நிறுவனங்கள் தெரிவித்து வருகின்றன.
இந்தச் சூழலில், பிரித்தானியா தனது தடுப்பூசி திட்டத்தை துரிதப்படுத்தி புதிய இலக்குகளை நிர்ணயித்துள்ளது குறிப்பிடத்தக்கது.