இணையத்தில் விற்பனைக்கு வந்த பெண்: நெகிழ வைக்கும் காரணம்

Report Print Basu in அமெரிக்கா

அமெரிக்காவில் பெண் ஒருவர் தனது செல்லப் பிராணியின் அறுவை சிகிச்சைக்காக தன்னை வலைதளத்தில் விற்ற சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து நெகிழ வைத்துள்ளது.

ஆர்லாண்டோ, புளோரிடாவை சேர்ந்த 42 வயதான Christy Cutliff என்ற பெண்ணே இச்செயலில் ஈடுபட்டுள்ளார். குறித்த டேட்டிங் வலைதளம் மூலம் Christy Cutliff, 47 வயதான Frank Befera என்ற பணக்கார மாப்பிளளையை கரம்பிடித்துள்ளார்.

Christy Cutliffயின் செல்லப் பிராணியான 9 வயதான Foxy யின் அறுவை சிகிச்சைக்காக Frank Befera 88 ஆயிரம் ரூபாய் அளித்துள்ளார்.

குறித்த டேட்டிங் தளத்தில் ஒரு பெண்ணை அதிக பணம் செலுத்தி பார்த்த நபர் என்ற பட்டியலில் Frank Befera முதலிடத்தை பிடித்துள்ளார்.

அறுவை சிகிச்சைக்கு பின் Foxy நலமாக இருப்பது தனக்கு மிக்க மகிழச்சி அளிப்பதாக Christy Cutliff தெரிவித்துள்ளார். இதற்காக நான் Frank Beferaவை சந்தித்ததினால் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளளேன். இப்போது என் வாழ்க்கையில் Frank Befera, Foxy என இரண்டு அன்பார்ந்தவர்கள் இருக்கிறார்கள் என தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments