கொளுத்தும் வெயில்: கெஞ்சும் கைதிகள்

Report Print Deepthi Deepthi in அமெரிக்கா

அமெரிக்காவில் உள்ள ஜெயிலில் அடைத்துவைக்கப்பட்டுள்ள கைதிகள் உள்ளே அதிகம் வெப்பம் தாங்க முடியாத காரணத்தால், எங்களுக்கு உதவி செய்யுங்கள் என ஜன்னல் வழியாக கெஞ்சும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

Minnesota மாநிலத்தில் உள்ள St Louis County Jail ஜெயிலில் தற்போது 730 கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த மாநிலத்தில் 90s முதல் 100 டிகிரி வரை வெப்பம் நிலவி வருகிறது.

இதனால் பொதுமக்கள் மட்டுமின்றி ஜெயிலில் உள்ள கைதிகளும் வெப்பத்தால் தவித்து வருகின்றனர். இந்நிலையில், St Louis ஜெயில் கைதிகள் தங்களால் ஏசி இல்லாமல் இருக்க முடியாது.

எனவே தயவு செய்து எங்களுக்கு உதவுங்கள் என ஜெயிலின் ஜன்னல் வழியாக கெஞ்சுகின்றனர்.

அவர்கள் கெஞ்சும் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers