ட்விட்டரில் பின்தொடர்பவர்களை டிரம்ப் பிளாக் செய்வது சட்டவிரோதமானது: நீதிபதி உத்தரவு

Report Print Balamanuvelan in அமெரிக்கா

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ட்விட்டரில் தன்னை பின்தொடர்பவர்களை பிளாக் செய்வது சட்டவிரோதமானது என நியூயார்க் ஃபெடரல் நீதிபதி ஒருவர் தீர்ப்பளித்துள்ளது அமெரிக்க அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ட்விட்டரில் டிரம்பினால் பிளாக் செய்யப்பட்ட கொலம்பியா பல்கலைக்கழகத்திலுள்ள Knight First Amendment Institute என்னும் நிறுவனம் மற்றும் ஏழு பேர் 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இந்த வழக்கைத் தொடர்ந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் (புதன் கிழமை) நியூயார்க் நகர ஃபெடரல் நீதிபதி ஒருவர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ட்விட்டரில் தன்னை பின்தொடர்பவர்களை பிளாக் செய்ய முடியாது என தீர்ப்பு வழங்கியுள்ளார்.

நீதிபதி Naomi Reice Buchwald, தனது தீர்ப்பில் @realDonaldTrump என்னும் தனது ட்விட்டர் கணக்கில் பதிவிடும் செய்திகளை சில அமெரிக்கர்கள் பார்க்கவிடாமல் தடுப்பதின் மூலம் டிரம்ப் அமெரிக்க அரசியல் சாசனத்தை மீறுவதாக தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகம் என்பது பொதுவான ஒன்று என்றும், தனிப்பட்டவர்களை டிரம்ப் தவிர்க்கமுடியாது என்றும், கூறிய நீதிபதி, அதிபருக்குரிய உரிமைகளின்படி பின்தொடர்பவர்களை பிளாக் செய்வதற்கான உரிமை டிரம்புக்கு உள்ளது என நீதித் துறை முன்வைத்த விவாதத்தை மறுத்தார்.

ஒரே நாளில் பல முறை இடுகையிடுவதால் அவரைக் குறித்து பல செய்திகள் வருமளவிற்கு ட்விட்டரை அதிகம் பயன்படுத்துபவர் டொனால்ட் டிரம்ப் என்பது உலகமே அறிந்த விடயம். அமெரிக்க அதிபர் டிரம்ப்பை 52.2 மில்லியன் பேர் பின்தொடர்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...