கர்ப்பிணி மனைவியையும் குழந்தைகளையும் கொன்ற அமெரிக்கர்: திடுக்கிடும் புதிய தகவல்கள்

Report Print Balamanuvelan in அமெரிக்கா

கொலராடோவில் தனது கர்ப்பிணி மனைவியையும் இரண்டு குழந்தைகளையும் கொன்று விட்டு அவர்கள் காணாமல் போனதாக நாடகமாடி பின்னர் கைது செய்யப்பட்ட Christopher Watts வழக்கில் திடுக்கிடும் திருப்பமாக பல புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

தனது மனைவியைக் கொன்று புதைத்து விட்டு தனது மகள்களை கச்சா எண்ணெய் வைத்திருந்த கேன்களில் போட்டு மூடினான் அவன்.

மூன்று பேரையும் கொன்று விட்டு உள்ளூர் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த Christopher Watts, தனது மனைவியையும் பிள்ளைகளையும் காணவில்லை என்றும் எங்கிருந்தாலும் திரும்பி வந்து விடுமாறும் கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்தான்.

கைது செய்யப்பட்டுள்ள அவன் மீது கொலைக் குற்றச்சாட்டு உட்பட ஒன்பது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் திடீரென புதுக் கதை ஒன்றைக் கூறியுள்ளான் Christopher Watts.

அதில் தான் குழந்தைகளை கவனிப்பதற்காக வைத்திருந்த மானிட்டரில் பார்க்கும்போது அவனது மனைவி தனது குழந்தைகளை கழுத்தை நெரித்துக் கொலை செய்வதை பார்த்ததாகவும் அந்த கோபத்தில் அவளைத் தான் கொலை செய்ததாகவும் தற்போது தெரிவித்துள்ளான்.

பின்னர் மூன்று பேரின் உடல்களையும் தான் வேலை பார்க்கும் இடத்திற்கு கொண்டு சென்று மறைத்தாதாகவும் அவன் தெரிவித்தான்.

ஆனால் நீதிமன்றம் அவனது இந்த புதுக் கதைகளை நம்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் இரண்டு நாட்கள் விசாரிக்க வேண்டிய விதத்தில் பொலிசார் விசாரித்ததில் Christopher Watts க்கும் அவனுடன் பணிபுரியும் இன்னொரு பெண்ணுக்கும் தவறான உறவு இருப்பது தெரியவந்துள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers