20 ஆண்டுகளுக்கு பின்னர் கலிபோர்னியாவை உலுக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: அலறியடித்து வெளியேறிய மக்கள்

Report Print Arbin Arbin in அமெரிக்கா

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் 20 ஆண்டுகளுக்கு பின்னர் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உலுக்கியுள்ளது.

ரிக்டர் அளவில் 6.4 என பதிவாகி உள்ள இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து 170 முறை நில அதிர்வும் ஏற்பட்டு கலிபோர்னியா பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

மட்டுமின்றி, இதன் தொடர்ச்சியாக மிக விரைவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து 240.கி.மீ. தொலைவில் ரிட்ஜ்கிருஷ் நகருக்கு அருகே ஏற்பட்ட நிலநடுக்கமானது கடந்த 20 ஆண்டுகளில் அந்த பகுதியில் உணரப்பட்ட மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் என கூறப்படுகிறது.

இதனையடுத்து குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் மாகாண ஆளுநர் அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளார்.

நிலநடுக்கத்தை உணர்ந்து குடியிருப்புகளை விட்டு வெளியே வந்த பொதுமக்கள் ,நில அதிர்வுகள் பலமுறை தொடர்ந்ததாக தெரிவித்துள்ளனர்.

சில இடங்களில் வீடுகள் சேதம் அடைந்தன. பொருட்கள் மேலே விழுந்ததில் சிலருக்கு காயம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தை தொடர்ந்து சில வீடுகள் தீப்பிடித்து எரிந்தன

இதனைத் தொடர்ந்து வெள்ளியன்றும் 5.4 ரிக்டர் அளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers