அமெரிக்காவில் இந்தியருக்கு நீதிபதி பதவி வழங்கிய டிரம்ப்!

Report Print Abisha in அமெரிக்கா

அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் உள்ள தெற்கு மாவட்ட நீதிமன்றத்தில் இந்திய அமெரிக்கரான அனுராக் நியமிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள தெற்கு மாவட்ட கோர்ட்டில் ஜேம்ஸ் ஐ கோன் என்பவர் நீதிபதியாக பணியாற்றி வருகிறார். இவரது பதவிக்காலம் விரைவில் முடிவடைய இருக்கிறது. இதையடுத்து, அவரது இடத்துக்கு இந்திய அமெரிக்கரான அனுராக் சிங்கால் என்பவரை அதிபர் டிரம்ப் தேர்வு செய்துள்ளார்.

அனுராக் சிங்காலுக்கு அமெரிக்க செனட்சபை ஒப்புதல் வழங்கும் பட்சத்தில் புளோரிடா தெற்கு மாவட்ட கோர்ட்டில் நீதிபதியாகும் முதல் இந்திய அமெரிக்கர் என்ற பெருமையை அவர் பெறுவார்.

முன்னதாக, புளோரிடாவில் பல்வேறு சட்ட நிறுவனங்களில் பணியாற்றிய அனுராக் சிங்கால், கடந்த 2011-ம் ஆண்டு புளோரிடாவின் 17-வது சர்கியூட் கோர்ட்டில் அரசு வழக்குரைஞராக பணியில் சேர்ந்தார். சர்ச்சைக்குரிய ஒரு கொலை வழக்கில் ஆஜரானது மூலம் அனுராக் சிங்கால் புளோரிடா மாகாண மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

அனுராக் சிங்கால்

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...