கருக்கலைப்புக்கு புகழ்பெற்ற மருத்துவர்: அவர் வீட்டில் உறவினர்கள் கண்ட காட்சி!

Report Print Balamanuvelan in அமெரிக்கா

கருக்கலைப்புக்கு புகழ்பெற்ற அமெரிக்க மருத்துவர் ஒருவர் சமீபத்தில் உயிரிழந்தார்.

அவரது வீட்டுக்குள் சென்ற உறவினர்கள் கண்ட காட்சி அவர்களை திகைப்படையச் செய்தது.

இல்லினாயிசைச் சேர்ந்த Dr. Ulrich Klopfer வரலாற்றிலேயே அதிக கருக்கலைப்புகளை செய்தவர் என்று அழைக்கப்படும் அளவுக்கு ஏராளமான கருக்கலைப்புகளைச் செய்துள்ளார்.

இம்மாதம் (செப்டம்பர்) 3ஆம் திகதி அவர் உயிரிழந்ததையடுத்து, அவரது வீட்டுக்கு சென்ற அவரது உறவினர்கள், அவரது வீட்டிலுள்ள அறை ஒன்றில் ஏராளமான கருக்கள் சேமித்து வைக்கப்பட்டிருப்பதைக் கண்டு திகைப்படைந்தனர்.

அந்த அறையில், 2,246 கருக்கள் நல்ல முறையில் பாதுகாக்கப்பட்டு, கெட்டுப்போகாமல் இருப்பதற்காக பயன்படுத்தப்படும் ரசாயனம் ஒன்றிற்குள் சேமித்து வைக்கப்பட்டிருந்தன.

2016ஆம் ஆண்டு, சரியான முறையில் நோயாளிகளை கவனிக்க தவறியதற்காகவும், தேவையான ஆவணங்கள் பல அவரிடம் இல்லாததற்காகவும் அவரது மருத்துவ உரிமம் ரத்து செய்யப்பட்டது.

அப்போது 71 வயதுடையவராக இருந்த Klopfer, ஆறு மாதங்களுக்கு பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.

அவர் 1970, 80களில் கருக்கலைப்புக்கு பயன்படுத்திய அதே முறைகளையும், மயக்க மருந்து கொடுக்கும் முறையையும் 2016ஆம் ஆண்டிலும் பயன்படுத்தி வருவதாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

ஆனால், தனது 43 வருட மருத்துவப்பணியின்போது கருக்கலைப்பு செய்யப்பட்ட ஒரு நோயாளிக்கு கூட மாரடைப்பு ஏற்படவோ, அல்லது ஒருவர் கூட உயிரிழக்கவோ இல்லை என வாதிட்டார் Klopfer.

வரலாற்றிலேயே அதிக அளவு கருக்கலைப்பு செய்தவர் என கூறப்படும் அளவுக்கு, Klopfer பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு கருக்கலைப்பு செய்துள்ளதாக பிரபல அமெரிக்க நாளிதள் ஒன்று அவரை விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Getty image

Getty image

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers