அவன் மற்றொரு பெண்ணை விரும்புகிறான்!... மாணவனை கொல்ல கத்தியுடன் வந்த மாணவி

Report Print Abisha in அமெரிக்கா

அமெரிக்காவில் உடன் படிக்கும் மாணவனை கொலை செய்ய கத்தியுடன் பள்ளிக்கு வந்த மாணவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் தெற்கு கரோலினால் உள்ள ஹில்டன் தீவு என்னும் கலைபடைப்பாக்கத்தில் மாணவி ஒருவர் படித்து வருகிறார். அவருக்கு, உடன் படிக்கும் மாணவன் மீது ஈர்ப்பு இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், அவரது புத்தகப்பைக்குள் 4inchநீளமுள்ள 2 கத்திகள் இருப்பதை சக மாணவி ஒருவர் கவனித்து ஆசிரியரிடம் தெரிவித்துள்ளார்.

உடனடியாக கத்தியை கைப்பற்றிய ஆசிரியர், மாணவியிடம் விசாரணை மேற்கொண்டதில், அவர் உடன் படிக்கு மாணவன் மற்றொரு மாணவியை விரும்புவதாக நினைத்து, அந்த மாணவனை கொலை செய்ய கத்தியை எடுத்து வந்ததாக தெரிவித்துள்ளார்.

அந்த கத்தியை முந்தைய நாள் இரவே தனது பைக்குள் மறைத்து வைத்து எடுத்து வந்துள்ளார் என்று கூறப்படுகின்றது. மேலும், ஏன் இரண்டு கத்திகள் எடுத்து வந்தார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்