என் தாய் என்னை கொல்லப்பார்க்கிறார், காப்பாற்றுங்கள்: அழைப்பை ஏற்று சென்ற பொலிசார் கண்ட காணக்கூடாத காட்சி!

Report Print Balamanuvelan in அமெரிக்கா

என் தாய் என்னை கொல்லப்பார்க்கிறார், காப்பாற்றுங்கள் என ஆறு வயது சிறுவன் ஒருவன் பொலிசாரை அழைக்க, அங்கு விரைந்த பொலிசார், 25 கத்திக்குத்து காயங்களுடன் அந்த சிறுவனையும், உடலில் சுத்தமாக ஆடையே இல்லாமல் நிர்வாணமாக அவனது தாயும் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

அமெரிக்காவின் Nevada பகுதியிலிருந்து பொலிசாருக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் ஒரு சிறுவன், என் தாய் என்னைக் கொல்லப்பார்க்கிறார், காப்பாற்றுங்கள் என்று அழுதுகொண்டே கூறுகிறான்.

அவசர உதவி அழைப்பை ஏற்கும் பெண், முகவரியைக் கேட்க, அந்த பெண் முகவரியை சொல்கிறார்.

அதற்குள் அந்த சிறுவன், என் தாய் என்னை கொல்லப்பார்க்கிறார் என்று கூறியவாறே, அம்மா அம்மா என்னை காயப்படுத்தாதீர்கள், தயவு செய்து காயப்படுத்தாதீர்கள் என்று கதறி அழுகிறான்.

அதற்குள் தொலைபேசி அழைப்பு துண்டிக்கப்பட்டுவிடுகிறது. ஆனால் சிறிது நேரத்திற்குள் பொலிசார் அந்த வீட்டுக்கு வந்து விடுகிறார்கள். முதலில் ஒரு பொலிசார் வீட்டுக் கதவைத் தட்ட, வீட்டுக்குள் இருந்து இரத்தம் சொட்ட சொட்ட வெளியே வருகிறான் ஒரு சிறுவன்.

வீடியோவைக் காண

Lee Xavier Brandon என்ற அந்த சிறுவனைக் கண்டதும், அவன் இருந்த நிலையைக் கண்டு, அதிர்ச்சியில் கத்திவிடுகிறார் அந்த பொலிஸ் அதிகாரி.

உடனே அவனை அழைத்துச் செல்ல ஆம்புலன்சை வரச்சொல்லிவிட்டு, வீட்டுக்குள் நுழைய அங்கே ஒரு பெண், Brandonஇன் தாய் Claudia Nadia Rodriguez (37) முழு நிர்வாணமாக தரையில் கிடக்கிறார்.

இங்கே என்ன நடக்கிறது என்று பொலிசார் கேட்க, Claudia பொலிஸ் அதிகாரியின் துப்பாக்கியைப் பிடுங்கி சுடுகிறார். நல்ல வேளையாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

ஆனால், Claudia சக பொலிசாரின் துப்பாக்கியை பிடுங்கியதைக் கண்டதும், மற்றொரு பொலிசார் சரமாரியாக அந்த பெண்ணை துப்பாக்கியால் சுடுகிறார்.

பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், தலையில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்திருந்ததின் காரணமாக அந்த பெண் உயிரிழந்துவிட்டார். Brandon மற்றொரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான்.

அவனது உடலில் 25 இடங்களில் கத்திக்குத்துக் காயங்கள் காணப்பட்டுள்ளன. அவன் தற்போது உடல் நலம் தேறி வருவதாகவும், அபாய கட்டத்தை தாண்டி விட்டதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

விசாரணையில், 2015க்கும் 2017க்கும் இடையில் வீட்டில் நடந்த வன்முறைச் சம்பவங்கள் காரணமாக Claudia நான்கு முறை கைது செய்யப்பட்டிருப்பதும், அவரது கணவர் குழந்தையை தன்னிடம் ஒப்படைக்கக்கோரி ஏற்கனவே வழக்கு தொடுத்திருப்பதும் தெரியவந்துள்ளது.

அத்துடன், ஏற்கனவே ஒரு முறை திருமணமான Claudia, மூத்த கணவர் மூலம் பிறந்த இரண்டு குழந்தைகளையும் கூட கொடுமைப்படுத்தியதாக Brandonஇன் தந்தை Willie Brandon Jr தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்