பொது இடத்தில் அமெரிக்கர் செய்த அருவருப்பான செயல்! வைரலாகும் வீடியோ

Report Print Balamanuvelan in அமெரிக்கா

அமெரிக்காவில் பல்பொருள் அங்காடி ஒன்றில் ஒரு நபர் செய்த அருவருப்பான செயலைத் தொடர்ந்து அவரை கைது செய்யவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

உலகம் முழுவதிலும் கொரோனா பரவி வரும் நிலையில், குறிப்பாக கொரோனா வைரஸ் எச்சில் வழியாக பரவும் என்று தெரிந்த நிலையிலும் சிலர் வேண்டுமென்றே மற்றவர்கள் மீது இருமுவது, எச்சிலைத் தொட்டு ரயில் கம்பியில் தேய்ப்பது போன்ற மோசமான செயல்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், அமெரிக்காவின் Missouri என்ற இடத்தில் அமைந்துள்ள ஒரு பல்பொருள் அங்காடியில், ஒருவர் ஷாம்பூ, சோப்பு முதலியவை இருக்கும் போத்தல்களை நாவால் நக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

ஷாம்பூ போத்தல் போல் தோன்றும் ஒன்றை நக்கியவாறே வீடியோவுக்கு போஸ் கொடுக்கும் அந்த நபர், கொரோனா வைரஸ் பயமா? எனக்கா? என்கிறார்.

ஏற்கனவே பல நாடுகளில் கொரோனாவை பரவ விடாமல் தடுப்பதற்காக அரசாங்கங்கள் எடுத்து வரும் நடவடிக்கைகளை மதிக்காமல் மக்கள் கூட்டம் கூடுவதும், கலாட்டா செய்வதுமாக உள்ளனர்.

இந்த நேரத்தில் இந்த வீடியோ வெளியானதையடுத்து, அந்த வீடியோவில் தோன்றும் நபரை கைது செய்யவேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...