பலத்த காற்று வீசும்... ஆனால் ஒகி புயல் கரையை கடக்காது: காரணம் இதுதான்

Report Print Kabilan in காலநிலை

ஒகி புயலானது கரையைக் கடக்க வாய்ப்பில்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கன்னியாகுமரிக்கு அருகே 60 கிலோ மீட்டர் தொலைவில் உருவாகியுள்ள ஒகி புயல் சின்னம், கன்னியாகுமரிக்கு கிழக்கு திசையில் மையம் கொண்டுள்ளது.

இந்த புயல் சின்னம் மெதுவாக நகர்ந்து, மேற்கு திசை நோக்கி நகரும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால், குமரி அல்லது கேரள எல்லைப் பகுதியில் கரையைக் கடக்காமல், கடல்பரப்பிலேயே சுழன்று,

லட்சத்தீவுகளுக்கு அருகே சென்று வலுவிழக்கும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஆனாலும், இந்த புயல் சின்னம் நகரத் தொடங்கும்போது தமிழகத்தில், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் சூறாவளிக் காற்றோடு, கனமழை பொழியும்.

எனினும், இந்த மாவட்டங்களுக்கு எந்த வித ஆபத்தும் ஏற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கன்னியாகுமரிக்குக் தெற்கில் cs என்று குறிப்பிடப்பட்டிருக்கும் புள்ளியில் உருவாகியுள்ள ஒகி புயல்,

மேற்கு திசையில் நகர்ந்து scs என்று பயணிக்க உள்ளது. இதன் காரணமாக தான் இந்த புயல் சின்னமானது கரையைக் கடக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறுகையில், ‘நேற்று தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவி வந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று காலை 8.30 மணியளவில்

புயலாக வலுவடைந்து கன்னியாகுமரிக்கு அருகே, 70 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில், தமிழகம் மற்றும் புதுவையின் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யும்.

மேலும், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, ராமநாதபுரம் உள்ளிட்ட கடல் பகுதிகளில் 65 கிலோ மீட்டர் முதல் 75 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

எனவே, கடல் சீற்றத்துடன் காணப்படுவதால், மீனவர்கள் யாரும் அடுத்த 24 மணிநேரத்திற்கு, கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் காலநிலை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்