மன நோயுடன் திகிலூட்டும் ஓவியங்களை வரைந்த பெண்

Report Print Printha in பெண்கள்

வினோத சப்தங்கள், காதின் அருகில் கிசுகிசுக்கப்படும் வசவுச் சொற்கள், தூரத்து அறையில் இருந்து வந்து பார்க்க சொல்லி அடம்பிடிக்கும் ஒரு குழந்தையின் குரல், இது போன்ற நிக்ழ்வுகள் சிலருக்கு மட்டும் நடப்பது போன்றே தெரியும்.

ஆனால் அவை அனைத்தும் உண்மையா அல்லது கற்பனையா என்பது தெரியாமலே தனது மன நிலையை குழப்பிக் கொள்வார்கள்.

இத்தகைய பாதிப்பு உள்ளவர்களுக்கு வந்திருக்கும் நோயின் பெயர் தான் மனச்சிதைவு நோய் (Schizophrenia) என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இந்த நோய் மிகவும் ஆபத்தான மனநோயாகக் கருதப்படுகிறது. இந்த நோயினால் அதிகப்படியான மன உளைச்சல்கள் ஏற்படும்.

இந்த மனச்சிதைவு நோயின் பாதிப்பு உள்ளவர்களுக்கு, இசை மற்றும் ஓவியக்கலை ஆகிய இரண்டு மட்டுமே இயல்பான வாழ்க்கையை வாழ முடியும் என்று நம்பிக்கையை ஏற்படுத்தி, அவர்களை எப்போதும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும்.

அந்த வகையில் மனச்சிதைவு நோய் பாதிப்பு உள்ள கேட் ஃபென்னர் (Kate Fenner) என்ற பெண்ணிற்கும் ஓவியங்கள் உதவுகின்றது.

இவருக்கு 17 வயதில் ஸ்கிசோஃப்ரினியா இருப்பதாகக் கண்டறியப்பட்டது. தற்போது, தன் குறையை மறந்து, தன் அன்றாட வாழ்வை ஓவியங்களால் நிரப்பிக் கொண்டிருக்கிறார்.

இந்த பெண் வரைந்த ஓவியங்களை இன்ஸ்டாகிராம் தளத்தில் பதிவிட, அதை ஐம்பதாயிரம் பேர்கள் வரை பாலோ செய்கின்றனர்.

இது குறித்து, நான் பிறப்பிலேயே ஓவியத் திறமையுடன் இருந்திருக்கிறேன் என்றே நினைக்கிறேன். ஆனால், இந்த நோய் தான் என் திறமையை எனக்கே அடையாளம் காட்டியிருக்கிறது.

எனக்குத் தோன்றும் மாயத் தோற்றங்களை நான் வரைகிறேன். என் ஓவியங்கள் தான் எனக்கு உற்றத் துணை.

என் ஓவியங்களில் பிரதான இடத்தைப் பிடிப்பவை சிறிய பூச்சிகள், அதிலும் முக்கியமாக ஈக்கள். ஒருவேளை, நானும் இந்த ஈக்களை போலப் பயனற்ற ஒன்றாக இருக்கிறேன் என்று என் கற்பனைகள் உணர்ந்து பார்ப்பதாக நினைக்கிறேன்.

என்று மனச்சிதை நோயினால் பாதிக்கப்பட்ட கேட் ஃபென்னர் கூறியுள்ளார்.

அவர் பதிவிட்ட படங்களில் சில....

என் அறையின் மேலுள்ள சிறுதுளை வழியாக இது ஊர்ந்து வந்தது. கிளிக் செய்யும் ஒலியை இது எழுப்புகிறது. சில சமயம் பொருள்களின் அடியில் இருந்து கூட இது வெளியே எட்டிப்பார்க்கும்.

இது என் முகம் தான். ஒருநாள் கண்ணாடியை பார்க்கும் போது இப்படி தான் தெரிந்தது.

எனக்குள் தீவிரமான எண்ணங்கள் சில அவ்வப்போது தோன்றும். வித்தியாசமான குரல்கள் வந்து பொருள்களை தீயிட்டு எரிக்கச் சொல்லி தூண்டி விடும்.

இந்தப் பறவை எனக்காகப் பாடல்கள் பாடும்.

மேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்