மாதவிடாயின் போது பயன்படுத்தப்படும் Menstrual cup! பயன்பாடுகளும், நன்மைகளும்

Report Print Trinity in பெண்கள்

பெண்மையின் அடையாளங்களின் ஒன்றான மாதவிடாய் காலங்களை மிகச் சுலபமான முறையில் கடக்கும் வகையில் தற்போது Menstrual cup பயன்பாட்டுக்கு வந்திருக்கிறது.

இயற்கையாகவே இந்நேரங்களில் அதிக ரத்தப்போக்கு, வயிற்று வலி, துர்நாற்றம் போன்ற அசௌகர்யங்களால் பெண்கள் அவதிப்படுவார்கள்.

நாப்கின்கள் ஓரளவுக்கு மாதவிலக்கு காலங்களில் உதவி செய்தாலும் அதன் மூலம் ஏற்படும் தீமைகளும் அதிகரித்துள்ளன.

நாப்கின்கள் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துகின்றன, மேலும் அதில் உள்ள பிளாஸ்டிக் அந்நேரங்களில் சருமத்தில் எரிச்சல் மற்றும் அரிப்பையும் புண்களையும் உண்டாக்குகிறது.

அதையும் தாண்டி உபயோகித்தாலும் கூட மாதவிலக்கு நேரங்களில் நீச்சல் போன்ற தண்ணீரில் இறங்கும் வேலைகளை செய்ய முடிவதில்லை, நாப்கின்களின் உற்பத்தி செலவைக் குறைக்க பல விஷயங்கள் செய்கின்றன.

இதில் நாப்கினை வெண்மைப் படுத்தும் டயாக்சினும், ஈரத்தை உறிஞ்சுவதற்காக கலக்கப்படும் Hexachlorodibenzofuran (HXCDF) என்ற ரசாயனமும் பலவிதமான உயிர்கொல்லி நோய்களுக்கு வழிவகுக்கிறது.

தன் வாழ்நாளில் சராசரியாக 15 ஆயிரம் சானிட்டரி நாப்கின்களை ஒரு பெண் உபயோகிக்க வேண்டியிருக்கிறது, இதன் மூலம் தினமும் 9 ஆயிரம் டன் நாப்கின் குப்பைகள் உருவாகின்றன.

பொதுவாகவே சானிட்டரி நாப்கின்கள் தெருக்களில் வீசப்படுவதால் கிருமித் தொற்றுகள் ஏற்படுகின்றன. துப்புரவுத் தொழிலாளர்கள்களும் இதன் மூலம் பாதிக்கப்படுகின்றனர்.

நாப்கின்களால் பாதிப்பு என்பது பெண்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த சமூகத்திற்கும் ஏற்படுகிறது. இந்தப் பிரச்னைகளுக்கான தீர்வாகதான் Menstrual cup கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்கின்றனர் மருத்துவர்கள்.

மென்ஸ்டுரல் கப் என்பது சிலிக்கான் மூலம் தயாராகும் ஒரு பொருள். இதன் வடிவம் கிண்ணம் போல் இருப்பதால் இதற்கு இப்பெயர் வந்தது. இதனால் இந்நேரங்களில் நீச்சல், குதிரையேற்றம் போன்ற வேலைகளைக் கூட செய்ய முடியும்

இதன் பயன்பாடு

சிலிகானால் ஆன மென்ஸ்டுரல் கப்பானது வளைந்து கொடுக்கும் தன்மை வாய்ந்தது என்பதால் இதன் வாய் அகன்ற பாகத்தை மடித்து பிறப்புறுப்பின் உள்ளே செலுத்த வேண்டும்.

உள்ளே செல்லும் கப் நேராக கர்ப்பப்பையின் வாயில் ஒட்டிக் கொள்கிறது. இதன் மூலம் அங்கிருந்து வெளியேறும் உதிரம் அந்தக் கப்பில் சேகரிக்கப்படுகிறது.

குறிப்பிட்ட இடைவெளிகளில் இந்தக் கப்பை வெளியே எடுத்து உதிரத்தை கழிவறையில் ஊற்றி விட்டு மீண்டும் இந்தக் கப்பை நன்றாக ஒருமுறை கழுவி விட்டுப் பின் மீண்டும் பொருத்திக் கொள்ள வேண்டும்.

ஒருமுறை வாங்கப்படும் மென்ஸ்டுரல் கப்பை 7 வருடங்கள் வரை உபயோகப்படுத்திக் கொள்ளலாம் என்கின்றனர். இதன் மூலம் எளிய மக்களும் பயனடைய முடியும். சமூகத்திற்கும் சுகாதாரக் கேடு விளைவது இல்லை.

ஆனால் சாதாரணமாக குழாயில் வரும் தண்ணீரில் சுத்தமாகக் கழுவினால் போதுமானது. இன்னமும் சற்று சுத்தமாக வைத்துக் கொள்ள விரும்புவார்கள் டெட்டால் போன்றவற்றை பயன்படுத்தி கழுவி ஈரம் காயம் உலர வைத்து அதற்கென தரப்பட்டிருக்கும் உறையில் போட்டு வைத்து விட்டு அடுத்த மாதம் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers