அந்த நாட்களில் நான் அனுபவித்த வேதனையால் தற்கொலைக்கு முயன்றேன்: பிரபல நடிகை நளினி

Report Print Deepthi Deepthi in பெண்கள்

மாதவிடாயின் போது ஏற்பட்ட அதிக ரத்தபோக்கு காரணத்தால் மன அழுத்தம் ஏற்பட்டு தற்கொலைக்கு முயன்றேன் என பிரபல நடிகை நளினி கூறியுள்ளார்.

பொதுவாக எல்லா பெண்களுக்கும் ஆரோக்கிய பிரச்சனை இருக்கிறது. அதிலும் குறிப்பாக மாதவிடாய் பிரச்சனை. அதனால் பாதிக்கப்பட்டு தான் தற்கொலை வரை சென்றதை பகிர்ந்துள்ளார் நடிகை நளினி.

40 வயது இருக்கையில் நான் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க ஆரம்பித்தேன். இரவு நேரம் படப்பிடிப்பு என்றால் வரமாட்டேன் என கூறிவிட்டு அழ ஆரம்பித்துவிடுவேன். எதற்காக அழுகிறேன் என்ற காரணம் தெரியாது.

வீட்டில் எப்போது கோபப்படுவேன், எப்போது சந்தோஷமாக இருப்பேன் என தெரியாது. எனது இரு பிள்ளைகளும் வீட்டுப்பாடம் செய்யவில்லை என்றால் கூட அவர்களை சத்தம்போடுவேன். இன்று என்ன சமையல் என்று என்னிடம் கேட்டால், நான் என்ன வேலைக்காரியா உங்களுக்கு சமைத்துக்கொடுக்க என்று கோபப்பட்டு கத்துவேன்.

மாதவிடாய் நேரத்தில் அதிக ரத்தப்போக்கு, உடம்பெல்லாம் தாங்க முடியாத வலி, சோர்வுன்னு ரொம்ப கஷ்டப்பட்டுட்டேன். என்னோட இந்தப் பிரச்னைக்காக அலோபதி, ஆயுர்வேதா, யுனானி, யோகானு எல்லா சிகிச்சைகளையும் எடுத்திருக்கேன்.

எனக்கு இருந்த அதிகமான ரத்தப்போக்கை பார்த்துட்டு மருத்துவர்களே `கருப்பையை எடுத்துடுங்க என்று சொல்லியிருக்காங்க. பயத்துல அந்த ஆபரேஷனுக்கு நான் ஒத்துக்கவே இல்லை,

ஒரு நாள் சாயங்கால நேரம். உடம்புல அங்கங்க சூடு பரவுது. இதயம் தடதடன்னு அடிச்சிக்க ஆரம்பிச்சுது. வீட்ல பிள்ளைகளும் இல்லை. மனசு தடுமாறி தற்கொலை கடிதம் எழுதி வைச்சுட்டு, என்ன செஞ்சுக்கலாம்னு யோசிச்சுக்கிட்டு இருந்தேன்.

ஆனால், பிள்ளைகள் அந்த நேரத்துக்கு வந்துட்டாங்க. நான் அழுதுக்கிட்டு உட்கார்ந்திருந்ததைப் பார்த்துட்டு, என் கையில் இருந்த லெட்டரை வாங்கி பிரிச்சுப் படிச்சுட்டாங்க.

`அம்மா, நீ என்ன சொன்னாலும் நாங்க கேட்கிறோம். எங்களை விட்டுட்டுப் போயிடாதேம்மான்னு என்னைக் கட்டிக்கிட்டு என் பிள்ளைங்க அழுத நொடி, எப்பவும் மறக்காது. எவ்ளோ பெரிய தப்பு பண்ண இருந்தோம்னு அப்பதான் எனக்குப் புரிஞ்சுது.

அன்றிலிருந்து எனது பைத்தியக்காரதனத்தை கைவிட்டு, மாதவிடாய் நேரத்தில் என்னை தைரியமாக வைத்துக்கொள்ள முடிவு செய்து அதன்படி தற்போது இருக்கிறேன்.

மேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...