வானத்தில் திருமணம் செய்து கொண்ட 16 இளம் ஜோடிகள் : வைரலாகும் வீடியோ

Report Print Raju Raju in ஆசியா
0Shares
0Shares
Cineulagam.com

தெற்கு சீனாவில் வானத்தில் பலூனில் மிதந்தபடியே 16 இளம் ஜோடிகள் திருமணம் செய்திருக்கும் செயல் வியப்படைய செய்துள்ளது.

சீனாவில் தற்போது வசந்த காலம் தொடங்கியுள்ள நிலையில் அங்கு பல்வேறு பகுதிகளில் மஞ்சள் நிற பூக்கள் பூத்து குலுங்குகின்றன.

இதற்கு முத்தாய்ப்பாக 16 இளம் ஜோடிகள் வானத்தையும், பூமியையும் சாட்சியாக வைத்து கொண்டு பறக்கும் பலூனில் திருமணம் செய்து கொண்டனர்.

இது குறித்து திருமணம் செய்து கொண்ட ஒரு இளம் ஜோடி கூறுகையில், பலூனில் மிதந்தபடி வண்ணமயமான பூக்களை பார்க்கும் போது ரம்மியமாக உள்ளது என கூறியுள்ளனர்.

பின்னர் இளம் ஜோடிகள் தங்களுக்குள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். வடக்கு சீனாவில் கடும் வெப்பம் நிலவி வரும் நிலையில், தெற்கு சீனாவில் இதமான சீதோஷ நிலை நிலவி வருவது குறிப்பித்தக்கது.

மேலும் ஆசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments