தனுசு ராசி நேயர்களே இன்று உங்களுக்கு இல்லத்திலும், உள்ளத்திலும் அமைதி கூடும் நாள்..!

Report Print Aravinth in ஜோதிடம்
0Shares
0Shares
Cineulagam.com
மேஷம்

கொடுத்த பணம் குறிப்பிட்டபடி வந்து சேரும் நாள். சிறப்புகள் வந்து சேர சிவதூதனை வழிபடுவது நல்லது. கொள்கை பிடிப்போடு செயல்படுவீர்கள். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள்.

ரிஷபம்

ஈஸ்வரன் வழிபாட்டால் இன்பம் காண வேண்டிய நாள். அடுத்தவர் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். வேலைப்பளு அதிகரிக்கும். பொருளாதார முன்னேற்றம் கருதி பயணமொன்றை மேற்கொள்வீர்கள்.

மிதுனம்

விரயங்கள் ஏற்படாதிருக்க விழிப்புணர்ச்சி தேவைப்படும் நாள். கொள்கை பிடிப்பைக் கொஞ்சம் தளர்த்திக் கொள்ளும் சூழ்நிலை ஏற்படும். வீடு மாற்றம், இடமாற்றம், பற்றிய சிந்தனை மேலோங்கும்.

கடகம்

திடீர் முன்னேற்றம் ஏற்படும் நாள். திட்டமிடாது செய்த காரியங்களில் கூட வெற்றி பெறுவீர்கள். விலை உயர்ந்த பொருட்கள் வீடு வந்து சேரும். வங்கிச் சேமிப்பை உயர்த்தும் எண்ணம் மேலோங்கும்.

சிம்மம்

வள்ளல்களின் உதவி கிடைத்து வளர்ச்சி கூடும் நாள். அரை குறையாக நின்ற கட்டிடப் பணிகளை மீதியும் தொடருவீர்கள். அதிகாரிகள் அனுகூலமாக நடந்து கொள்வர். வருமானம் திருப்தி தரும்.

கன்னி

குறை சொல்லியவர்கள் கூட பாராட்டுகின்ற நாள். பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணைவர். கூட்டுத் தொழிலில் இருந்த குழப்பங்கள் மாறும். வர வேண்டிய பணம் வசூலாகும்.

துலாம்

இறை வழிபாட்டால் இனிமை காண வேண்டிய நாள். மனதில் இனம்புரியாத கவலைகள் ஏற்படலாம். பிறருக்காகப் பொறுப்புகள் சொல்வதை தவிர்ப்பது நல்லது. அலைச்சல் அதிகரிக்கும்.

விருச்சிகம்

நலங்கள் வந்து சேர நந்தியெம்பெருமானை வழிபட வேண்டிய நாள். விருந்தினர் வருகை உண்டு. எடுத்த காரியத்தை எளிதில் செய்து முடிப்பீர்கள். தொலைபேசி வழி தகவல் மகிழ்ச்சி தரும்.

தனுசு

இல்லத்திலும், உள்ளத்திலும் அமைதி கூடும் நாள். உத்தியோக அனுகூலம் உண்டு. மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். கூட்டு முயற்சிக்கு ஒத்துழைப்பு கிடைக்கும். கடன் சுமை குறையும்.

மகரம்

துன்பங்கள் தூளகும் நாள். தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகள் குடும்ப பொறுப்புணர்ந்து நடந்து கொள்வர். தித்திப்பான செய்தியொன்று வந்து சேரலாம்.

கும்பம்

சிவாலய வழிபாட்டால் செல்வாக்கு உயரும் நாள். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழும் வாய்ப்பு கிட்டும். வாங்கல் கொடுக்கல்களை ஒழுங்கு செய்து கொள்வீர்கள்.

மீனம்

வெற்றிச் செய்திகள் வீடு வந்து சேரும் நாள். சகோதர வழியில் எதிர்பார்த்த நற்பலன் கிட்டும். பஞ்சாயத்துக்கள் நல்ல முடிவாகும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் கவனம் செலுத்துவீர்கள்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments