சனிப்பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்- மகம் முதல் ரேவதி வரை

Report Print Fathima Fathima in ஜோதிடம்
0Shares
0Shares
Cineulagam.com

மகம்

19.12.2017 முதல் 28.03.2020 வரை

வாழ்க்கையில் சுயம்புவாகத் திகழ்ந்து வெற்றிபெறும் மக நட்சத்திர அன்பர்களே, இந்த சனிப் பெயர்ச்சி காலத்தில் சனி பகவான் நல்ல நிலையில் அமர்ந்துள்ளார். இதனால் மனோதைரியம் கூடும். எல்லா வகையிலும் சுகம் உண்டாகும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். வயிறு கோளாறு உண்டாகலாம். தூக்கம் குறையும். எதிர் பாலினத்தாரின் நட்பு கிடைக்கும். அரசாங்கம் தொடர்பான பணிகள் சாதகமாக நடக்கும். முக்கிய நபர்களின் உதவியும் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் இருந்த மெத்தனப் போக்கு மாறும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் சுமாரான பலன் தரும். உத்தியோகஸ்தர்கள் திட்டமிட்டபடி பணிகளை முடிக்க முடியாமல் தாமதம் ஏற்படலாம்.

சக ஊழியர்களுடன் கவனமாகப் பழகுவது நல்லது. குடும்பத்தாரால் சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட்டாலும் அதை வளரவிடாமல் சமாளித்து விடுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே இடைவெளி காணப்படும். பிள்ளைகள் புத்தி சாதூர்யமாக நடந்து கொள்வது மன மகிழ்ச்சியை தரும். பெண்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகளை அடைவீர்கள். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடும் முன் ஆலோசனைகளில் ஈடுபடுவது நல்லது. அரசியல்வாதிகள் முக்கிய நபர்களை சந்திக்க வேண்டியிருக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும். மாணவர்கள் திட்டமிட்டபடி பாடங்களைப் படித்து கூடுதல் மதிப்பெண் பெறுவீர்கள். உயர்கல்விக்காக எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன்தரும். முயற்சிகளில் வெற்றி. திட்டமிட்ட பணிகளில் தொய்வு.

பரிகாரம்:

விநாயகருக்கு ஞாயிற்றுக்கிழமையில் தீபம் ஏற்றி வழிபட குடும்பத்தில் அமைதி உண்டாகும். வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும்.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 7.

பூரம்

19.12.2017 முதல் 28.03.2020 வரை

உலக மக்கள் அனைவரையும் தன் மக்களாக பாவிக்கும் மனம் கொண்ட பூர நட்சத்திர அன்பர்களே, இந்த சனிப் பெயர்ச்சி காலத்தில் எதிர்பார்த்த பணம் வரும். எதிர்ப்புகள் விலகும். வயிற்று கோளாறு ஏற்படும். எந்த காரியம் செய்தாலும் தாமதம் உண்டாகும். எல்லாவற்றிலும் ஒருவித பயம் ஏற்படும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். வீடு, வாகனம் தொடர்பான விஷயங்களில் கூடுதல் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் மெத்தனமான போக்கே காணப்படும். வியாபாரம் தொடர்பான பயணங்களைத் திட்டமிட்டபடி மேற்கொள்ள முடியாத நிலை உண்டாகும்.

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலக வேலைகளால் டென்ஷன் உண்டாகலாம். ஆனாலும் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு இருக்கும். குடும்பத்தாரால் நிம்மதி குறைவு உண்டாகலாம். கணவன், மனைவி இருவரும் மனம் விட்டுப் பேசுவதன் மூலம் முக்கியமான காரியங்களில் நல்ல முடிவு எடுக்க முடியும். பிள்ளைகளின் நலனுக்காக பாடுபட வேண்டியிருக்கும். பெண்கள் வாக்குவாதங்களையும், அடுத்தவர் பற்றிய விமர்சனங்களையும் தவிர்ப்பது நல்லது. கலைத்துறையினருக்கு வாகனத்தை ஓட்டும்போது கவனம் தேவை. அரசியல்வாதிகளுக்கு மனக் குழப்பம் நீங்கும். பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை அதிகரிக்கும். திடமான மனதுடன் படிப்பது வெற்றியை தரும். பணவரவு நன்றாக இருக்கும். இனம் புரியாத பயம் ஏற்படலாம்.

பரிகாரம்:

ஸ்ரீமஹாலக்ஷ்மிக்கு பாயாசம் நிவேதனம் செய்து வணங்கிவர எதிர்ப்புகள் அகலும்.

அதிர்ஷ்ட எண்கள்: 2, 3, 6.

உத்திரம்

19.12.2017 முதல் 28.03.2020 வரை

உழைப்பிற்கும், சிக்கனத்திற்கும் பெயர் பெற்ற உத்திர நட்சத்திர அன்பர்களே, இந்த சனிப் பெயர்ச்சி காலத்தில் பேச்சில் இனிமை மற்றும் சாதூர்யத்தின் மூலம் காரிய வெற்றி காண்பீர்கள். பணவரத்து கூடும். சாமர்த்தியமான செயல்களால் மதிப்பும், அந்தஸ்தும் உயரும். மனக்கவலை நீங்கும்படியான சூழ்நிலை இருக்கும். உற்சாகம் உண்டாகும். பயணத்தின்போது ஏற்பட்ட தடங்கல் நீங்கும். தொழில், வியாபாரம் லாபகரமாக நடக்கும். போட்டிகள் விலகும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு முன்னேற்றம் காண்பீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணிகளை விரைந்து முடிக்க தேவையான உதவிகள் கிடைக்கும். புதிய வேலை தொடர்பாக மேற்கொள்ளும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.

குடும்பத்தார் உங்களை அனுசரித்துச் செல்வார்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த பிரச்னைகள் தீரும். பிள்ளைகள் மூலம் பெருமை உண்டாகும்.

பெண்களுக்கு எதிர்பாராத பணவரத்து இருக்கும். மனக்கவலை நீங்கி, உற்சாகம் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.கலைத்துறையினருக்கு போட்டிகள் மறையும். ஒப்பந்தங்கள் தொடர்பான காரியங்கள் சாதகமாக பலன் தரும். அரசியல்வாதிகளுக்கு கடன் தொடர்பான பிரச்னைகள் தீரும். பணவரத்து கூடும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெறுவோம் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகளில் தாமதம் ஏற்படலாம்.

பரிகாரம்:

தினமும் சூரிய நமஸ்காரம் செய்வதால் உடல் நலம் சீராகும். பொருளாதார சூழ்நிலை நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 9.

அஸ்தம்

19.12.2017 முதல் 28.03.2020 வரை

பொழுதுபோக்கிற்கும் கேளிக்கைகளுக்கும் இடம் கொடுத்தாலும் செய்யும் வேலைக்கும் முக்கியத்துவம் அளிக்கும் ஹஸ்த நட்சத்திர அன்பர்களே, இந்த சனிப் பெயர்ச்சி காலத்தில் எதிலும் கவனமாக இருப்பது நல்லது. ஏதேனும் மனக்கஷ்டம் உண்டாகும். வீண் செலவு ஏற்படும். உடல்சோர்வு வரலாம். மனோ தைரியம் கூடும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். முயற்சிகள் சாதகமான பலன் தரும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றமடைய பாடுபடுவீர்கள். எதிர்பார்த்த ஆர்டர்கள் வரலாம். சரக்குகளை அனுப்பும்போது கவனம் தேவை. உத்தியோகஸ்தர்கள் பணி நிமித்தமாக அலைய வேண்டி இருக்கும்.

குடும்பத்தில் நிம்மதி குறையும்படியான சூழ்நிலை வரலாம். கணவன், மனைவிக்கிடையே விட்டுக்கொடுத்து செல்வதும், வாக்குவாதங்களைத் தவிர்ப்பதும் நல்லது. பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்வது அவர்களின் வெற்றிக்கு உதவும். பெண்களுக்கு மனோதைரியம் கூடினாலும் பழைய சம்பவங்களின் நினைவால் மனமகிழ்ச்சி குறையும். கலைத்துறையினர் புத்தி சாதுரியத்தால் எதையும் சமாளிப்பீர்கள். அரசியல்வாதிகளுக்கு தாங்கள் எடுக்கும் பணிகளில் இடையூறுகள் ஏற்படலாம். பழைய பாக்கிகள் வசூலில் தாமதமான நிலை காணப்படும். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் அக்கறை தேவை. திட்டமிட்டபடி செயல்பட முடியாதவகையில் தடங்கல்கள் ஏற்படலாம். மன வலிமை அதிகமாகும். அரசாங்க ரீதியில் அனுகூலம் ஏற்படும். குடும்பத்தினரிடம் பேசும்போது கவனம் தேவை.

பரிகாரம்:

அம்மனுக்கு நெய்விளக்கு ஏற்றி வழிபடுவதன் மூலம் எதிலும் சாதகமான பலன் கிடைக்கும். குடும்பத்திலுள்ள பிரச்னைகள் அகலும்.

அதிர்ஷ்ட எண்கள்: 2, 3, 6.

சித்திரை

19.12.2017 முதல் 28.03.2020 வரை

பணத்தைவிட மனத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் சித்திரை நட்சத்திர அன்பர்களே, இந்த சனிப் பெயர்ச்சி காலத்தில் பணவரத்து இருக்கும். மனக்கவலை நீங்கும். எடுத்த காரியத்தை திருப்தியுடன் செய்து முடிப்பீர்கள். சாமர்த்தியமான பேச்சு இக்கட்டான நேரங்களில் கைகொடுக்கும். எதிலும் கவனம் தேவை. புதிய நண்பர்களின் சேர்க்கையும் அவர்களால் உதவியும் கிடைக்கும். தொழில், வியாபாரம் தொடர்பான பணிகள் தடையின்றி நடக்கும். புதிய ஆர்டர் தொடர்பான காரியங்கள் சாதகமான பலன் தரும். வியாபாரப் போட்டிகள் குறையும். உத்தியோகஸ்தர்கள் பணிசுமை குறைந்து மனநிம்மதி அடைவார்கள்.

குடும்ப உறுப்பினர்களிடம் வாக்குவாதத்தைத் தவிர்ப்பது நன்மை தரும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகள் வழியில் நிம்மதி கிடைக்கும். பெண்களுக்கு காரியங்களில் ஏற்பட்ட தடை நீங்கி, எல்லாம் திருப்தியாக நடந்து முடியும். சாதூரியமான பேச்சின் மூலம் பிரச்னைகள் தீரும். பணவரத்து திருப்தி தரும். கலைத்துறையினர் நிதானமாக செயல்படுவது நல்லது. அரசியல்வாதிகள் வளர்ச்சி பெற மிகவும் கவனமாக இருத்தல் வேண்டும்.

மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்களில் இருந்த போட்டிகள் குறையும். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். போட்டிகள் குறையும். எதிர்காலம் பற்றி மனக் குழப்பங்கள் அதிகமாகும்.

பரிகாரம்:

தினமும் கந்தசஷ்டி கவசம் சொல்லி முருகனை வழிபடுவதால் எடுத்த முயற்சிகள் வெற்றி பெறும்.

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9.

சுவாதி

19.12.2017 முதல் 28.03.2020 வரை

குணத்திலும் நடவடிக்கையிலும் அடிக்கடி மாற்றங்களைக் கொண்டிருக்கும் ஸ்வாதி நட்சத்திர அன்பர்களே இந்த சனிப் பெயர்ச்சி காலத்தில் பணத்தேவை அதிகரிக்கும். வீண்செலவு, மனஅமைதி பாதித்தல் ஆகியவை இருக்கும். விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வாய்க்கு ருசியாக உண்பீர்கள். காரியதாமதம், உடல் சோர்வு, வீண்பகை போன்றவை ஏற்படலாம். ஆனாலும் உங்களைக் கண்டு அடுத்தவர் பொறாமைபடக்கூடும். தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களுக்காக அலைய வேண்டியிருக்கும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்துப் பேசுவது நல்லது. உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வதன் மூலம் நன்மை கிடைக்கப் பெறுவார்கள்.

குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்களால் டென்ஷன் உண்டாகலாம். கணவன், மனைவி இருவரும் கோபமான பேச்சை விடுத்து அமைதியாக எதையும் எடுத்து சொல்வது நல்லது. பிள்ளைகளின் நலனுக்காக செலவு செய்ய வேண்டியிருக்கும். பெண்களுக்கு மனஅமைதி பாதிக்கும்படியான சூழ்நிலை உண்டாகலாம். திடீர் செலவு உண்டாகும். விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். கலைத்துறையினருக்கு விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கும்.

அரசியல்வாதிகளுக்கு வளர்ச்சியில் இருந்த முட்டு கட்டைகள் நீங்கும். மாணவர்கள் பாடங்களை மிகவும் கவனமாக படிப்பது கூடுதல் மதிப்பெண் பெற உதவும். சக மாணவர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. முயற்சிகள் வெற்றி தரும். தந்தை வழி உறவினர்களுடன் மனக்கிலேசம் ஏற்படலாம்.

பரிகாரம்:

ஸ்ரீநரஸிம்மரை தினமும் வணங்கிவர காரியத்தடை நீங்கும். வாழ்க்கை வளம் பெறும்.

அதிர்ஷ்ட எண்கள்: 4, 5, 9.

விசாகம்

19.12.2017 முதல் 28.03.2020 வரை

கொடுத்த வேலையை சரியான முறையில் முடிக்கும் திறன் படைத்த விசாக நட்சத்திர அன்பர்களே, இந்த சனிப் பெயர்ச்சி காலத்தில் எல்லாவற்றிலும் லாபம் கிடைக்கும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்வதன் மூலம் நன்மதிப்பு பெறுவீர்கள். உங்களுடன் கருத்து வேற்றுமை ஏற்பட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் உங்களை நாடி வருவார்கள். தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பணிகளை சிரமமின்றி செய்து முடிப்பார்கள். பயணங்கள் செல்ல வேண்டியிருக்கும்.

குடும்பத்தில் சகஜநிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே சுமுக உறவு இருக்கும். பிள்ளைகளுக்கு தேவையான ஆடை அணிகலன்கள் வாங்கிக் கொடுத்து மகிழ்விப்பீர்கள். பெண்களுக்கு, கருத்து வேற்றுமையால் பிரிந்து சென்றவர்கள் மனம் மாறி மீண்டும் திரும்பி வருவார்கள். பணவரத்து திருப்தி தரும். காரிய அனுகூலம் உண்டாகும். கலைத்துறையினருடன் உடன் பணிபுரிபவர்கள் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடலாம். அரசியல்வாதிகளுக்கு முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். மாணவர்களுக்குக் கல்வி தொடர்பான செலவு கூடும். கல்வியில் முன்னேற வேண்டும் என்பதை குறிக்கோளாகக் கொண்டு பாடங்களை படிப்பீர்கள். அனைவரிடத்திலும் உறவு சுமுகமாக இருக்கும். சோம்பல் அதிகரிக்கும்.

பரிகாரம்:

அருகிலுள்ள சிவன் ஆலயத்திற்குச் சென்று தினமும் நவகிரக சந்நதியில் உள்ள சனிபகவானை தரிசித்து வாருங்கள். தடைகள் அனைத்தும் நீங்கும்.

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5.

அனுஷம்

19.12.2017 முதல் 28.03.2020 வரை

எந்த வேலையையும் அதிக சிரத்தையுடனும் அதீத முயற்சியுடனும் செய்யும் அனுஷ நட்சத்திர அன்பர்களே, இந்த சனிப் பெயர்ச்சி காலத்தில், காரிய அனுகூலம் உண்டாகும். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். துணிச்சலுடன் செயல்பட்டு எடுத்த காரியத்தைச் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணவரத்து இருக்கும். இடமாற்றம், வெளியூர் பயணங்கள், அலைச்சல் ஆகியவை இருக்கும். தொழில், வியாபாரம் முன்னேற்ற பாதையில் செல்லும். அரசு தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்குக் கட்டளை இடுகின்ற பதவி கிடைக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்கிறவர்களுக்கு வேலை கிடைக்கும்.

குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும். யாரிடமும் எதிர்த்து பேசி விரோதத்தை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது நன்மை தரும். கணவன் மனைவிக்கிடையே இருந்த பிரிவு நீங்கி ஒன்று சேர்வார்கள். பிள்ளைகள் எதிர்காலம் பற்றிய எண்ணம் மேலோங்கும். பெண்கள் எந்த செயலையும் தைரியமாக செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத திடீர் செலவுகள் வீண் அலைச்சல் உண்டாகலாம். கலைத்துறையினருக்கு முன்னேற்றம் சீரான பாதையில் இருக்கும்.

அரசியல்வாதிகளுக்கு மேலிடத்தில் நெருக்கம் அதிகரிக்கும். மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் கஷ்டமான பாடங்களையும் மனம் துவளாமல் படிப்பீர்கள். குடும்ப நிலை சிறக்கும். எடுத்த காரியங்களில் தடை.

பரிகாரம்:

குலதெய்வத்தையும் முன்னோர்களையும் தினமும் வணங்கி வாருங்கள். மன நிம்மதி அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்: 2, 3, 7.

கேட்டை

19.12.2017 முதல் 28.03.2020 வரை

சோம்பலுக்கு இடம் கொடுக்காமல் எறும்பு போன்று சுறுசுறுப்பாகத் திகழும் கேட்டை நட்சத்திர அன்பர்களே, இந்த சனிப் பெயர்ச்சி காலத்தில் உல்லாச பயணங்கள் செல்ல நேரலாம். நற்பெயரும், புகழும் உண்டாகும். புண்ணிய காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பங்களை சந்திக்க நேரலாம். எப்படிப்பட்ட பிரச்னை வந்தாலும் சமாளித்துவிடும் திறமை இருக்கும்.தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் வியாபார வளர்ச்சிக்காக துணிச்சலுடன் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு முன்னேற்ற வாய்ப்புகள் வந்து சேரும். சக ஊழியர்கள், மேலதிகாரிகளின் ஆதரவுடன் பணிகளை திறமையாக செய்து முடிப்பீர்கள்.

குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளின் செயல்பாடுகள் திருப்திகரமாக இருக்கும். மனவருத்தத்துடன் சென்ற உறவினர்கள் வருத்தம் நீங்கி மீண்டும் வந்து சேருவார்கள். பெண்கள் பயணங்கள் செல்ல நேரிடும். எந்த பிரச்னை வந்தாலும் அதை சமாளிக்கும் திறமை உண்டாகும். அடுத்தவர் நலனில் அக்கறை காட்டுவீர்கள். கலைத்துறையினர் விடாமுயற்சியுடன் காரியங்களை செய்து சாதகமான பலன் பெறுவீர்கள். பணவரத்து திருப்தி தரும். அரசியல்வாதிகளுக்கு புத்தி தெளிவு ஏற்படும். பிரச்னைகள் குறையும். தேவையான உதவி கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காணப்படும். விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி வாய்ப்பு உண்டாகும். பணவரத்து நன்றாக இருக்கும். உத்தியோகத்தில் மாறுதல்கள் வரலாம்.

பரிகாரம்:

செவ்வாய்க்கிழமையில் பெருமாள் ஆலயத்திற்குச் சென்று வழிபட்டு வரவும். மனக்கவலை நீங்கும்.

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 6.

மூலம்

19.12.2017 முதல் 28.03.2020 வரை

அனைத்து விஷயங்களிலும் நேர்மை, நிதானம், ஒழுக்கம் கொண்டு வாழ்வில் முன்னேறும் மூல நட்சத்திர அன்பர்களே, இந்த சனிப் பெயர்ச்சி காலத்தில் சனி பகவான் உங்கள் நட்சத்திரத்திலேயே சஞ்சரிப்பதால் விருப்பத்திற்கு மாறாக காரியங்கள் நடக்கலாம். மனக்குழப்பம் உண்டாகலாம். பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. அடுத்தவருடன் சில்லறை சண்டைகள் ஏற்படலாம். வயிறு தொடர்பான நோய் ஏற்படலாம். பணவரத்து இருக்கும். பயணங்கள் மகிழ்ச்சி தருவதாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். எதிர்பார்த்தபடி பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களுடன் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.

குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்பாடுகள் உங்களது கோபத்தை தூண்டுவதாக அமையலாம். அனுசரித்துச் செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் முன்னேற்றத்திற்காக பாடுபடுவீர்கள். பெண்களுக்கு காரியத் தடையால் மனக்குழப்பம், டென்ஷன் உண்டாகலாம். பணவரத்து இருக்கும். கலைத்துறையினருக்கு சுக்கிரனின் சஞ்சாரம் எதிர்பாராத நல்ல திருப்பங்களை ஏற்படுத்தும். மனதில் சந்தோஷம் உண்டாகும்.

அரசியல்வாதிகளுக்கு புதிய பதவிகள் கிடைக்கும். ஒப்பந்தங்களில் ஏற்படும் சந்தேகங்களை அவ்வப்போது போக்கிக் கொள்வது நல்லது. திட்டமிட்டு செயலாற்றுவது முனனேற்றத்திற்கு உதவும். மாணவர்கள் யாரிடமும் வாக்குவாதம் செய்யாமல் அனுசரித்து செல்வது நல்லது. மிகவும் கவனமாக பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும். தொழில், உத்தியோகம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சலசலப்பு ஏற்படலாம்.

பரிகாரம்:

ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை அர்ப்பணித்து வணங்கி வாருங்கள். வீண் அலைச்சல் குறையும்.

அதிர்ஷ்ட எண்கள்:1, 3, 7.

பூராடம்

19.12.2017 முதல் 28.03.2020 வரை

கலைநயம் அதிகம் கொண்ட பூராட நட்சத்திர அன்பர்களே, நீங்கள் தன்னம்பிக்கை கொண்டவர். இந்த சனிப் பெயர்ச்சி காலத்தில் பணவரத்து எதிர்பார்த்ததை விட கூடுதலாக வரும். பேச்சில் இனிமை மற்றும் சாதூர்யத்தால் எடுத்த காரியத்தைத் திறம்பட செய்து முடிப்பீர்கள். எதிலும் கவனமாக இருப்பது நல்லது. அக்கம்பக்கத்தாருடன் சில்லறை சண்டைகள் உண்டாகலாம். எதையும் சமாளிக்கும் மனநிலை ஏற்படும். தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் சிறு தடங்கல்கள் உண்டாகலாம். பார்ட்னர் மூலம் நன்மை உண்டாகும். நிதி உதவி எதிர்பார்த்தபடி கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் கூடுதலாக உழைத்து அலுவலகப் பணிகளை முடிக்க வேண்டியிருக்கும்.

குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன்மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும். பிள்ளைகள் உங்களது கருத்துகளை கேட்டு அதன்படி நடப்பது மனதுக்கு மகிழ்ச்சியை தரும். பெண்கள் சாமர்த்தியமான பேச்சு மற்றும் சூழ்நிலையை புரிந்துகொண்டு நடப்பதன் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். கலைத்துறையினருக்கு பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

அரசியல்வாதிகளுக்கு எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். பொருளாதார விவரங்களை கவனமாக வைத்துக் கொள்வது நல்லது. மாணவர்கள் கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றமடைய கூடுதலாக நேரம் எடுத்துக்கொண்டு கவனத்தை சிதற விடாமல் படிப்பது அவசியம். எதையும் சமாளிக்கும் திறமை ஏற்படும். அக்கம்பக்கத்தினரிடம் சில்லறை சண்டைகள் ஏற்படலாம்.

பரிகாரம்:

பெருமாள் கோயிலிலுள்ள தாயாரை தினமும் வணங்கிவர பணம் சார்ந்த பிரச்னைகள் அகலும்.

அதிர்ஷ்ட எண்கள்: 2, 3, 6.

உத்திராடம்

19.12.2017 முதல் 28.03.2020 வரை

அழகாலும், அறிவாலும் அனைவரையும் அன்புடன் நடத்தும் உத்திராட நட்சத்திர அன்பர்களே, இந்த சனிப் பெயர்ச்சி காலத்தில் எதிர்ப்புகள் நீங்கும். நோய்கள் விலகி உடல் ஆரோக்கியம் உண்டாகும். பணவரத்து எதிர்பார்த்ததைவிட அதிகரிப்பது மனமகிழ்ச்சியைத் தரும். எதிரிகளால் இருந்துவந்த பிரச்னை தீரும். நண்பர்கள் மூலம் தேவையான உதவிகள் கிடைக்கும். தொழில், வியாபாரம் தொடர்பான பயணங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும். இனிமையான பேச்சின் மூலம் வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக் கொள்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலக பணி தொடர்பான அலைச்சல் இருக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

குடும்பத்தில் உங்களது பேச்சுக்கு எதிர்பேச்சு பேசியவர்கள் அடங்கி விடுவார்கள். கணவன், மனைவிக்கிடையில் மகிழ்ச்சி நீடிக்கும். பிள்ளைகள் தொடர்பான காரியங்களை செய்துமுடிக்க அலைய வேண்டியிருக்கும். பெண்களுக்கு உங்களது செயல்களுக்கு இருந்த முட்டுகட்டைகள் விலகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணவரத்து கூடும்.கலைத்துறையினருக்கு பணவரவு அதிகப்படும். அரசியல்வாதிகளுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். வீண் அலைச்சல் உண்டாகலாம். மாணவர்களுக்கு கல்வியில் திறமை வெளிப்படும். கல்வியில் வெற்றி பெற தேவையான உதவிகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறக்கும். அலைச்சல் அதிகரிக்கும்.

பரிகாரம்:

தினமும் ஆதித்யஹ்ருதயம் சொல்லி சூரியனை வழிபட, உடல் நலம் சீராகும்.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 9.

திருவோணம்

19.12.2017 முதல் 28.03.2020 வரை

சொல் செயல் புத்தி ஆகிய அனைத்திலும் தூய்மையைக் கடைபிடிக்கும் திருவோண நட்சத்திர அன்பர்களே, இந்த சனிப் பெயர்ச்சி காலத்தில் மனக்கவலை ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத செலவு ஏற்படும். மற்றவர்களுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பதால் பகை ஏற்படாமல் இருக்கும். எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் பாராட்டு கிடைப்பது அரிது. சிலரது எதிர்பாராத பேச்சு மனவருத்தத்தை தரலாம் கவனம் தேவை. தொழில், வியாபாரம் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கும்போது தீர ஆலோசித்தபின் முடிவு எடுப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள், மேலதிகாரிகள், சக ஊழியர்களின் கருத்துக்கு மாற்று கருத்து சொல்லாமல் இருப்பது நன்மை தரும்.

குடும்பத்தில் இருப்பவர்களுடன் கருத்து மோதல் உண்டாகலாம். அதேசமயம் கணவன், மனைவிக்கிடையே இருந்த பூசல்கள் சரியாகும். பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். அதோடு அவர்களது நலனுக்காகப் பாடுபட வேண்டியிருக்கும். பெண்கள் உங்களது கருத்துக்கு சிலர் மாற்று கருத்து கூறலாம். எதிர்த்து பேசாமல் அமைதியாக இருப்பது நல்லது. கலைத்துறையினருக்கு மனதில் இருந்த குழப்பம் நீங்கி நிம்மதி உண்டாகும். கடன் பிரச்னை தீரும்.

அரசியல்வாதிகளுக்கு நிதானமாக எதையும் செய்தால் வெற்றி நிச்சயம். பிடிவாதத்தை விடுவது நன்மை தரும். மாணவர்கள் எவ்வளவு திறமையாக படித்தாலும் பாடங்கள் கடினமானவை போலத் தோன்றும். மனதை தளரவிடாமல் படிப்பது வெற்றியை தரும். முக்கிய முடிவுகள் நல்ல தீர்வாக அமையும். எதிர்பாராத செலவு ஏற்படும்.

பரிகாரம்:

சந்திர தரிசனம் செய்வதால் மனக்குழப்பம் அகலும். குடும்ப பிரச்னைகள் தீரும்.

அதிர்ஷ்ட எண்கள்: 2, 3, 6.

அவிட்டம்

19.12.2017 முதல் 28.03.2020 வரை

வேகமான நடவடிக்கைகளால், மேற்கொள்ளும் காரியங்களில் லாபம் ஈட்டும் அவிட்ட நட்சத்திர அன்பர்களே, இந்த சனிப் பெயர்ச்சி காலத்தில் அடுத்தவருடன் ஏற்படும் பிரச்னைகளிலும் வாக்குவாதத்திலும் வெற்றியே கிடைக்கும். பணவரத்தும் கூடும். ஆனால் எந்த காரியத்தில் ஈடுபட்டாலும் அடுத்தவரை நம்புவதில் மட்டும் எச்சரிக்கை தேவை. உங்களுக்கு மிகவும் வேண்டியவர் உங்களை விட்டு விலகி செல்லலாம். மாற்று மதத்தினரின் உதவி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த பணவரவு இருக்கும். போட்டிகள் குறையும். புதிய முயற்சிகளில் ஈடுபடத் தோன்றும். உத்தியோகஸ்தர்கள் செய்யும் பணிகள் திருப்திகரமாக நடந்து முடியும். எதிர்பார்த்த இடமாற்றம் வரலாம்.

குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை அனுசரித்து செல்வது மனதுக்கு இதமாக இருக்கும். கணவன், மனைவிக்கிடையே சிறிய வாக்குவாதம் ஏற்படலாம். பிள்ளைகள் உங்களைப் புரிந்து கொண்டு நடப்பது மனதுக்கு நிம்மதியை தரும். பெண்களுக்கு சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி உண்டாகும். அடுத்தவரை நம்பி பொறுப்புகளை ஒப்படைப்பதில் கவனம் தேவை. கலைத்துறையினருக்கு சனியின் சஞ்சாரம் யோகஸ்தானத்தில் இருப்பதால் எதையும் சாதிக்கும் திறமை அதிகமாகும். அரசியல்வாதிகளுக்கு மனம் வருந்தும்படியான சூழ்நிலை ஏற்படும். நிதானத்தை கடைபிடிப்பது வெற்றிக்கு உதவும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த போட்டிகள் விலகும். பாடங்களை படிப்பதில் இருந்த இடையூறுகள் நீங்கும். போட்டிகள் குறையும். இடமாற்றம் ஏற்படும்.

பரிகாரம்:

அருகிலிருக்கும் முருகன் ஆலயத்திற்குச் சென்று வணங்கி வருவது நன்மையைத் தரும். குடும்ப பிரச்னை தீரும்.

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9.

சதயம்

19.12.2017 முதல் 28.03.2020 வரை

உலக மக்கள் அனைவரும் நலமுடனும் வளமுடனும் இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட ஸதய நட்சத்திர அன்பர்களே, இந்த சனிப் பெயர்ச்சி காலத்தில் துன்பம் வருவதுபோல் இருக்குமே தவிர, ஆனால் வராது. மனதில் ஏதேனும் கவலை, பயம் அவ்வப்போது ஏற்படும். உங்களது பேச்சே உங்களுக்கு எதிர்ப்பை உண்டாக்கலாம். யோசித்து பேசுவது நல்லது. ஆன்மிக எண்ணம் அதிகரிக்கும். தொழில், வியாபாரம் மூலம் வர வேண்டிய லாபம் தாமதப்படும். எதிர்பார்த்த நிதியுதவி ஓரளவு கிடைக்கும். ஆர்டர்களுக்காக மேற்கொண்ட அலைச்சல் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விருப்பம் இல்லாத மாற்றம் வரலாம்.

குடும்பத்தில் வீண் வாக்குவாதங்கள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பிள்ளைகள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்கள், நண்பர்களிடம் கவனமாக பழகுவது நல்லது. பெண்களுக்கு எந்த ஒரு காரியத்தையும் செய்து முடிக்கும்வரை அந்த காரியம் முடியுமோ, முடியாதோ என்ற மனக்கவலை இருக்கும். வீண் அலைச்சல் குறையும். கலைத்துறையினருக்கு சோம்பேறிதனத்தை விட்டுவிட்டு நன்கு உழைப்பது வெற்றிக்கு வழிவகுக்கும். அரசியல்வாதிகளுக்கு செயல்திறமை கூடும். பயணங்களும் செல்ல நேரிடலாம். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெறுவது பற்றிய மனக்கவலை இருக்கும். சகமாணவர்களுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. லாபம் அதிகரிக்கும். எதிர்பார்த்த நிதி குறையலாம்.

பரிகாரம்:

நாகதேவதையை வணங்கிவர காரியத்தடை நீங்கும். வாழ்க்கை வளம் பெறும்.

அதிர்ஷ்ட எண்கள்: 4, 5, 9.

உத்திரட்டாதி

19.12.2017 முதல் 28.03.2020 வரை

குறுக்கு வழியைப் பின்பற்றாமல் நேர் வழியில் சென்று வாழ்க்கையில் வெற்றிபெறும் உத்திரட்டாதி நட்சத்திர அன்பர்களே, இந்த சனிப் பெயர்ச்சி காலத்தில் பணவரத்து கூடும். ஆன்மிக செலவுகள் உண்டாகும். காரியத்தடை, தாமதம் விலகும். ஆனாலும் அந்த காரியத்தை செய்து முடிக்கக் கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். அன்னிய மொழி பேசுபவர்களால் உதவி கிடைக்கும். வசிக்கும் இடத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற தேவையான வாய்ப்பு கிடைக்கும். தொழில் போட்டிகள் விலகும். தேவையான நிதியுதவி கிடைக்கக்கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக பணிகளை கவனித்தாலும் அலுவலக வேலைகளில் தாமதம் இருக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும்.

குடும்பத்தில் இருந்த சண்டைகள் நீங்கும். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு செயல்படுவார்கள். பிள்ளைகள் மூலம் பெருமை உண்டாகும். புத்திசாதூரியத்தால் பொருள் சேர்க்கை ஏற்படும். தாய்வழி உறவினர் மூலம் உதவிகள் கிடைக்கும். பெண்களுக்கு காரியங்களில் இருந்துவந்த தடைகள் நீங்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். ஆன்மிக எண்ணம் அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு மனதில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். வாகனங்களில் செல்லும்போதும், வெளியூர்களுக்கு செல்லும்போதும் கூடுதல் கவனம் தேவை. அரசியல் துறையினர் வளர்ச்சி பெற மிகவும் கவனமாக இருப்பது நல்லது. செலவை குறைப்பதன் மூலம் பண தட்டுப்பாட்டைக் குறைக்கலாம். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடை விலகும். தேவையான பண உதவி கிடைக்கும். தடைபட்ட காரியங்களில் தடை நீங்கும். தொழில் போட்டிகள் அதிகரிக்கும்.

பரிகாரம்:

நவகிரகங்களை வலம் வந்து, தீபம் ஏற்றி வணங்க முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்: 2, 3, 7.

ரேவதி

19.12.2017 முதல் 28.03.2020 வரை

தனது வாழ்க்கையே சேவைக்காக அர்ப்பணிக்கும் ரேவதி நட்சத்திர அன்பர்களே, இந்த சனிப் பெயர்ச்சி காலத்தில் பொருளாதார சிக்கல் ஏற்பட்டு நீங்கும். எந்த ஒரு காரியத்திலும் தெளிவான முடிவு எடுக்க முடியாத குழப்பம் ஏற்பட்டு பின்னர் சரியாகும். சொன்ன சொல்லைக் காப்பாற்றி விடுவீர்கள். அதனால் மதிப்பு கூடும். எதிர்ப்புகளை சமாளித்து முன்னேற எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் திட்டமிட்டபடி செயலாற்றி வெற்றியை எட்டிப் பிடிப்பார்கள். வியாபார போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி கிடைக்கலாம். சிலருக்குக் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும். வருமானம் கூடும்.

குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களைப் பற்றி உயர்வாகப் பேசுவார்கள். கணவன்மனைவிக்கிடையே நிதானமான போக்கு காணப்படும். பிள்ளைகளின் கருத்தை அறிந்து அதற்கேற்றார்போல் செயல்படுவது நன்மை தரும். மூத்த சகோதரர் உடல்நலத்தில் கவனம் தேவை. பெண்களுக்கு மனக்குழப்பம் ஏற்பட்டு நீங்கும். திட்டமிட்டு செயல்படுவது காரிய வெற்றிக்கு உதவும். கலைத்துறையினருக்கு எந்த விவகாரத்தில் சிக்கினாலும் சாமர்த்தியமாக மற்றவரை முன் நிறுத்தி, தான் தப்பித்துக் கொள்ளும் சூழ்நிலைகள் வரும்.

அரசியல் துறையினருக்கு வளர்ச்சியில் இருந்த முட்டுக்கட்டைகள் நீங்கும். பயணங்கள் செல்ல நேரலாம். பணவரத்து திருப்தி தரும். மாணவர்களுக்கு கூடுதலாக பொறுப்புகள் சேரும். கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். கவனமாக படிப்பது நல்லது. நிதானம் அதிகரிக்கும். தேவையற்ற வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம்.

பரிகாரம்:

பைரவரை தினமும் வணங்கிவர மனஅமைதி உண்டாகும். எதிலும் நற்பலன் கிடைக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 6.

- Dina Karan

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்