இறந்த குழந்தைக்கு உயிர் கொண்டு வந்த தாய்: கங்காரூ குட்டி கதை தான் காரணம் என நெகிழ்ச்சி

Report Print Santhan in அவுஸ்திரேலியா
0Shares
0Shares
lankasri.com

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 2010-ஆம் ஆண்டு பிரசவத்திற்காக கேட் ஓக் டேவிட் என்ற பெண் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு ஆண் மற்றும் பெண் என இரட்டை குழந்தைகள் பிறந்தன. குறைந்த எடையில் பிறந்த இரு குழந்தைகளையும் காப்பாற்ற மருத்துவர்கள் பெருமுயற்சி செய்தனர்.

இதில் பெண் குழந்தை உயிர்பிழைத்தது, ஆண் குழந்தையை காப்பாற்ற முடியவில்லை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கேட் ஓக்-கிடம் கூறியுள்ளனர்.

பிறந்த சில மணிநேரங்களிலேயே தான் பெற்ற குழந்தை இறந்ததை தாங்கிக்கொள்ள முடியாத அவர், தன் குழந்தையை தன்னிடம் கொண்டு வரும் படி கூறியுள்ளார்.

கொண்டு வந்த குழந்தையை தனது மார்போடு கட்டியணைத்தபடி, தொடர்ந்து இரண்டு மணிநேரம் தனது உடலுடன் சேர்த்து அணைத்துக் கொண்டு அழுதவாறே இருந்தார்.

அப்போது குழந்தை மூச்சுவிடுவதை உணர்ந்த அவர் உடனடியாக மருத்துவர்களிடம் கூறியுள்ளார்.

உடனடியாக மருத்துவர் ஒருவர் குழந்தையை சோதித்து பார்த்த போது, குழந்தை உயிருடன் இருக்கிறது. இதைத் தன்னால் நம்பவே முடியவில்லை என்று கூறியதுடன், மற்ற மருத்துவர்களை அழைத்துள்ளார்.

அதைத் தொடர்ந்து குழந்தைக்கு சிகிச்சை அளித்து வந்ததால், சிறிது நேரத்தில் குழந்தை கண்விழித்தது.

இதுகுறித்து குழந்தையின் தாய் கேட் ஓக் டேவிட் கூறுகையில், தங்கள் நாட்டில் தாய் கங்காரூ குட்டிகளை எவ்வாறு பாதுகாக்கும் என்ற கதைகளை தான் சிறு வயதில் கேட்டதாகவும், கங்காரூ குட்டி பிறந்தவுடன் தாயின் கதகதப்போ, வாசமோ, இதயத்துடிப்பின் ஓசையோ கேட்கவில்லை என்றால் அது துடிதுடித்து உயிரிழந்துவிடும்.

ஒரு தாய் கங்காரூ எப்படி தனது குட்டியை வயிற்றின் அடிப்பகுதியில் உள்ள பைக்குள் அரவணைத்து வைத்திருந்து கதகதப்பு ஏற்றுமோ, அதேபோல் எனது சருமத்தின் கதகதப்பில் பிரிந்துப்போன எனது குழந்தையின் உயிர் மீண்டும் உடலில் குடியேறும் என நான் முழுமையாக நம்பியதாகவும், அது வீண் போகவில்லை தன் குழந்தை உயிருடன் வந்துவிட்டான் எனவும் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் கேட் ஓக் டேவிட் யூடியூபில் இது குறித்து பேசிய சம்பவம் அன்னையர் தினமான இன்று வைரலாக பரவி வருகிறது.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments