அவுஸ்திரேலியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு

Report Print Arbin Arbin in அவுஸ்திரேலியா
579Shares
579Shares
lankasrimarket.com

அவுஸ்திரேலியாவின் கிழக்கு பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அவுஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 7.3 என பதிவாகியுள்ளது.

நியூ கலிடோனியா பகுதியில் உள்ள லாய்லிட்டி தீவுகளின் இந்த நிலநடுக்கம் தாக்கியதாக தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து அவுஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் நேரப்படி காலை 9.43 மணியளவில் நிலநடுக்கம் தாக்கியதாக தெரிய வந்துள்ளது.

நிலநடுக்கம் உருவான பகுதியில் இருந்து சுமார் 300 கிலோ மீற்றர்கள் தொலைவு வரை சுனாமி அலைகள் தாக்க கூடும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மட்டுமின்றி இது அபாயகரமானதாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.

நியூ கலிடோனியா பகுதி பிரஞ்சு பிரதேசமாகும். தென் பசிபிக்கில் அமைந்துள்ள அனேகம் தீவுகளால் உருவான பகுதியாகும். இங்கு சுமார் 270,000 மக்கள் குடியிருப்பதாக தெரிய வந்துள்ளது.

இதுவரை நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பில் எவ்வித தகவலும் உத்தியோகபூர்வமாக வெளியாகவில்லை.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்