ஷாம்புவில் கொஞ்சம் உப்பு கலந்து பயன்படுத்துங்கள்: இந்த அதிசயம் நடக்கும்

Report Print Printha in அழகு
1540Shares
1540Shares
lankasrimarket.com

சருமம் மற்றும் அழகிற்கும் பலவித அற்புதங்களை உப்பு தருகிறது, அதோடு மட்டுமில்லாமல் கிருமிகளின் தொற்றுக்களை போக்கவும் உப்பு பயன்படுகிறது.

ஆனால் உப்பை தனியாக பயன்படுத்துவதை விட அழகுக் பொருட்களை சேர்த்து பயன்படுத்தினால் விரைவில் பலன் கிடைக்கும்.

ஷாம்புவுடன் உப்பு கலந்து பயன்படுத்துவதன் நன்மைகள்

  • 1 சிட்டிகை உப்பை ஷாம்புவுடன் கலந்து பயன்படுத்தினால் முடி உதிர்வை தடுத்து, முடியின் வளர்ச்சியை தூண்டுகிறது.

  • உப்பு ஒரு கிருமி நாசினி என்பதால் அது தலையில் வரும் பொடுகிற்கு காரணமான கிருமிகளை அழித்து பொடுகு, அரிப்பு போன்ற பிரச்சனை வராமல் தடுக்கிறது.

  • கூந்தலுக்கு உந்த உப்பு கலந்த ஷாம்புவை பயன்படுத்துவதால், அது அதிக எண்ணெய் சுரப்பதை கட்டுப்படுத்தி கூந்தலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

  • கூந்தல் கரடுமுரடாக உள்ளவர்கள் உப்பு கலந்த ஷாம்புவை பயன்படுத்தினால் கூந்தலில் மிருதுத் தன்மை அதிகரித்து, பளபளப்பாக இருக்கும்.

  • உப்பை கொண்டு ஸ்க்ரப்பாக பயன்படுத்தினால் இறந்த செல்களை உடலில் இருந்து நீங்கி சரும அலர்ஜி மற்றும் சருமத்தில் அழுக்கு சேர்வதை தடுக்கும்.

  • 1 ஸ்பூன் ஆலில் ஆயிலுடன் உப்பை கலந்து அதை முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து கழுவினால் சருமம் மென்மையாகி, சருமத்தில் உள்ள தடிப்பு, மேடு, பள்ளம் நீங்கும்.

  • எலுமிச்சை சாறு மற்றும் தயிர் ஆகிய இரண்டையும் 1 ஸ்பூன் அளவு எடுத்து அதில் 1/2 ஸ்பூன் உப்பு கலந்து முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து கழுவினால் முகம் மென்மையாக மாறும்.

  • 1/2 ஸ்பூன் உப்பை 1 ஸ்பூன் தேனில் கலந்து அதனை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவினால் சரும சுருக்கம், மெல்லிய கோடுகள் போன்றவற்றை நீங்கும்.

  • குளிக்கும் போது நீரில் 1/2 ஸ்பூன் உப்பு மற்றும் சில துளி எலுமிச்சை சாறு கலந்து தொடர்ந்து குளித்து வந்தால் கிருமிகள், வியர்வை துர்நாற்றம் வராது.

  • உப்பை நீரில் கரைத்து, அந்த உப்புக் கரைசலை கண்களுக்கு அடியில் தடவி 10 நிமிடங்கள் கழித்து கழுவினால் கண்களின் கீழ் இருக்கும் வீக்கம் குறையும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்