மதுபோதையில் கார் ஓட்டிய பெண்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி

Report Print Peterson Peterson in கனடா
0Shares
0Shares
lankasri.com

கனடா நாட்டில் மதுபோதையில் பெண் ஒருவர் கார் ஓட்டியபோது நிகழ்ந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியான சம்பவத்தில் தற்போது அதிரடி திருப்புமுனை ஏற்பட்டுள்ளது.

கனடாவின் Saskatchewan மாகாணத்தில் உள்ள Saskatoon நகரில் தான் இத்துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இதே பகுதியை சேர்ந்த கேத்தரின் மெக்கே என்பவர் கடந்தாண்டு ஜனவரி 3-ம் திகதி மது அருந்திவிட்டு கார் ஓட்டியுள்ளார்.

நிதானத்தை இழந்த அவர் காரை தாறுமாறாக ஓட்டியதாக கூறப்படுகிறது. இதன் விளைவாக சாலையில் சென்றபோது மற்றொரு கார் மீது பலமாக மோதியுள்ளார்.

இவ்விபத்தில் காரில் பயணம் செய்த 34 மற்றும் 33 வயதான தம்பதி, இவர்களின் 5 மற்றும் 2 வயது குழந்தைகளுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

விபத்து பகுதிக்கு மீட்புக்குழுவினர் சென்றபோது தம்பதி இருவரும் ஏற்கனவே உயிரிழந்துள்ளனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த குழந்தைகள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

ஆனால், சிகிச்சை பலனளிக்காத காரணத்தினால் குழந்தைகள் இருவரும் பலியாகினர்.

விபத்தை ஏற்படுத்திய கேத்தரின் மேக்கேக்கு நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

இந்நிலையில், கேத்தரினுக்கு மது வழங்கிய இரண்டு பார்கள் மீது வழக்கு பதிவு செய்ய மாகாண அரசு தீர்மானித்துள்ளது.

இதுக் குறித்து அரசு காப்பீடு நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், ‘விபத்தை ஏற்படுத்திய கேத்தரின் அளவுக்கு அதிகமாக 3 மடங்கு மது அருந்தியுள்ளார்.

பார்களில் வாடிக்கையாளர்களுக்கு மது வழங்குவதில் உள்ள விதிமுறைகளை இரண்டு பார்களும் மீறியுள்ளன. சரியான அளவில் மது வழங்கியிருந்தால் இவ்விபத்தை தவர்த்திருக்க முடியும்’ என விளக்கம் அளித்துள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments